இந்த 4 ராசிகளுக்கு இன்று அதிஷ்டம் கொட்டபோகுது,இன்றைய பலன்.

rasipalan

rasipalan

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன .

மேஷ ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நினைத்ததில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உறவினர் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும்.

ரிஷப ராசி நேயர்களே இன்று தொழிலில் உண்டான தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் இன்று எளிதாக வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள். செயலில் இருந்த குழப்பங்கள் விலகும்.

மிதுனம் ராசி அன்பர்களே இன்று அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி உற்சாகமுடன் செயல்படுவீர்கள். முயற்சி வெற்றியாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். வெளியூர் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும்.

கடக ராசி அன்பர்களே இன்று விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். விஐபிகளின் ஆதரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய முயற்சியில் ஆதாயம் ஏற்படும்.

சிம்மம் ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். எதிர்பாராத வருமானம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

கன்னி ராசி அன்பர்களே இன்று மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவது அவசியம். அத்தியாவாசிய செயல்களில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் படித்து பார்ப்பது நன்மையாகும்.

துலாம் ராசி அன்பர்களே இன்று அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் தோன்றும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். நீண்டநாள் பிரச்சினை ஒன்று முடிவிற்குவரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத லாபம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். குடும்ப நலனுக்காக சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே இன்று தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து அதை மாற்றம் செய்வீர்கள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறை ஆதாயமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும்.

மகரம் ராசி அன்பர்களே இன்று இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். பணவரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஒரு சிலர் ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர்கள். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று முடிவிற்கு வரும். உங்கள் செயல் ஆதாயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் ராசி அன்பர்களே இன்று சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகளால் சில சங்கடங்கள் தோன்றும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் என்பதால் அமைதி காப்பது நன்மையாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் இன்று தலையிட வேண்டாம். புதிய முயற்சிகள் சங்கடத்தில் முடியும்.

மீனம் ராசி அன்பர்களே இன்று அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.

ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560

Exit mobile version