பிரதமர் திரு.நரேந்திர மோடியின்பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநிலம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பாஜக இளைஞர் அணியை சேர்ந்த 4529 நபர்கள் பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.அதேபோல மாநிலம் முழுவதும் 70,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுவர் விளம்பரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என பல நிகழ்ச்சிகள் இந்த வாரம் தோறும் கொண்டாடப்பட்டுவருகிறது.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா இந்தமுறை தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டதை தி.மு.கவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லைபிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா தொடர்ந்து சிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் பாஜக மகளிரணி கூட்டம் நடைபெற்றது.
இதற்காக அங்குள்ள சுவர் பகுதிகளில் பாஜக போஸ்டர் ஒட்டப்பட்டது.மேலும் சின்னங்கள் வரையப்பட்டன.
இதனை அறிந்த திமுகவினர் அந்த இடத்திற்கு சென்று, பாஜக மகளிரணியிரணுடன் பிரச்சனை செய்துள்ளனர். தங்கள் பகுதிக்குள் பிற கட்சியின் போஸ்டர் ஒட்டக்கூடாது என்றும் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், பாஜக கட்சியை சார்ந்த பெண்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து திமுக அராஜகத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவித்து நங்கநல்லூர் பகுதியில் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பொது செய்தியாளர்களை சந்தித்த பாஜக இளைஞரணி தலைவர் திமுகவை கடுமையாக சாடினார். இதில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பங்கேற்று பேசிய போது, ’’டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்கு திமுகவினால் பாதுகாப்பு இல்லை. அதேபோல் காவல்துறையினருக்கும் தி.மு.க வால் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பா.ஜ.கவின் கொடி பறப்பதால் திமுக அச்சமடைகிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது.
இது பழைய பாஜக இல்லை. பாஜக 2.0 திமுகவில் இருந்து வெளியேறுபவர்கள் அதிமுகவில் இணைவது வழக்கம். ஆனால் தற்போது திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளதார். இது பாஜகவின் வளர்சிக்கு உதாரணம். உலகமே பார்த்து பயப்படும் சீனாவை ஓடவிடும் கட்சி பா.ஜ.க. எங்களுக்கு திமுக எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. திமுகவில் ஏராளமான இளைஞர்கள் செல்வதாக கூறப்படுவது பொய். விட்டால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட திமுகவில் இணைந்து விட்டதாக திமுகவினர் பொய் கூறுவார்கள்’’என அவர் கடுமையாக விமர்சித்தார்.