ஜெய் பீம் படத்தில் “சிவ சிவ” என சொல்லும் காட்சி எதற்கு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கிருஷ்ணசாமி! தடை செய்யப்படுமா ஜெய் பீம்!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது;
‘உலக இந்து விழிப்புணர்வு,மற்றும் ஒருங்கிணைப்பு’ மாநாடு வரும் டிசம்பர் மாதம் தென்காசி செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற உள்ளது . இதற்கு முன்னோடியாக, அக்டோபர் 28 ம் தேதி சென்னையில் வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாங்கள் ஒரு போராட்டத்தை மேற்கொண்டோம் ′′ என்று அவர் கூறினார்.

அரசியல் இயக்கங்களின் ‘தகுந்த போராட்டங்களினால்’ லாபம் சம்பாதிக்கும் தமிழ்த் திரையுலகம் என ஜெய் படம் குறித்து விமர்சித்தார் கிருஷ்ணசாமி. பல இயக்கங்கள் பல தடைகளை எதிர்த்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு போராட்டங்களை மேற்கொள்கிறோம். நாம் போராடும் போது மக்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைப்பதில்லை. குறிப்பாக கொடியாங்குளம் விவகாரம். நமக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. மாஞ்சோலை போராட்டத்தின் போது யாரும் எங்களுக்கு ஆதரவு தரவில்லை.

கண்டதேவி படத்தி நாங்கள் போராடிய எங்களை பற்றி எந்த படத்துலயும் ஒரு சீன் கூட வைக்கல சமீபத்தில் கர்ணனில் கொடியாங்குளம் போராட்டங்களை நாங்கள் தான் மேற்கொண்டோம் ஆனால் அதை பற்றி யார் என்று குறிப்பிடப்படவில்லை,” என்றார்’ மேலும் வணிக நோக்கங்களுக்காக ‘ ஜெய் பீம் ‘ படத்தலைப்பாக பயன்படுத்துவதை மிகப்பெரும் குற்றம். ′′ இது சமூக விடுதலைக்கான முழக்கம். வணிக நோக்கங்களுக்கான இது திரைப்பட தலைப்பு அல்ல. இந்திய அரசு இந்த படத்தை தடை செய்திருக்க வேண்டும்,” சாதி, மத, மொழி மிருகங்கள் படம் எடுப்பதாக கூறி அவர் கூறினார். ′′ இந்த நாட்டில் சென்சார் போர்டு எதற்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை

மேலும் மதம் சம்பந்தமாக அந்தோணி சாமி பெயரை குருமூர்த்தி என மாற்றினார்கள். மொழிப்பிரச்சனை தூண்டுவதற்காக காவல்துறை அதிகாரியாக நடித்த பிரகாஷ் ராஜ் விசாரிக்கும் பொழுது ஹிந்தியில் பேசுபவரை அடித்து தமிழில் பேசு என மொழி பிரச்சனையை தூண்டினார்கள். சாதி பிரச்சனையை தூண்டும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன பிரச்சனையை தூண்டும் விதமாக சிவ சிவ என கூறி வரும் பிரமாண வக்கீலாக ஒரு கதாபாத்திரம் வைத்து அவரை காமெடியாக சித்தரித்துள்ளார்.

சந்த்ரு என்பவர் ஒரு பார்ட் தான் தவிர அதற்கு போராடிய கோவிந்தன் தான ஹீரோ அவரை நோக்கி படம் எடுக்கவில்லை இது முற்றிலும் வணிகம் நோக்கம் தான். ஜாதி, மத, மொழி, இன பிரச்சனையை தூண்டும் ஜெய்பீம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும்

இது அனைத்தும் மக்களிடையே பிரிவினை தூண்டும் விதமாகவும் மோதல்களை உண்டாக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி சென்சார் அனுமதி அளித்தது என்பது புரியவில்லை. மேலும் திரை உலகம் திருந்தாவிட்டால் திருத்தப்படுவாய் புதிய தமிழகம் காலத்தில் இறங்கும் என அறிவித்தார். பேசிய வீடியோவை காண கிளிக் செய்யவும்.

விவசாயிகளுக்கு ₹ 25,000 / ஹெக்டேர் நிதி நிவாரணம் மாநில அரசு அறிவிப்பு போதாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறினார். ′′ விவசாயிகளுக்கு ₹ 1.25 லட்சம் / ஹெக்டேர் கொடுத்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து வெளியே வர முடியும்,” என்றார். ′′அனால் தற்போது தலைக்கீழாக உள்ளார். விவசாய தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு ₹ 5,000 வழங்க வேண்டும் மற்ற குடும்பங்களுக்கு ₹ 2,500 கொடுக்க வேண்டும்,” என்றார்.

Exit mobile version