மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணைமுதல்வராக உள்ளார். அஜித் பவார் நெருங்கிய வட்டாரங்களில் சி.பி.ஐ ரெய்டு கடந்த மாதம் நடத்தியது. மேலும் அவரின் நெருங்கிய உறவினர் வைத்திருக்கும் புனேயைச் சேர்ந்த கட்டுமான அலுவலகங்களில் சி.பி.ஐ ஏற்கெனவே ரெய்டு நடத்தியுள்ளது. மேலும் கடந்த மாதம் 10-ம் தேதி வருமான வரித்துறையினர் அஜித் பவார் சகோதரிகளின் இல்லம், நிறுவனங்களில் ரெய்டு நடத்தினர்.
அஜித் பாவரின் சொந்தங்கள் இந்தியா முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது.வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது. இந்த நிலையில் சி.பி.ஐ மும்பை, புனே, சதாரா, கோவா உட்பட 70 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இவற்றில் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 184 கோடி ரூபாய் அளவுக்குக் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
சி.பி.ஐ ரெய்டு நடந்த வேளையில் புதிய திருப்பமாக அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இதில் மும்பை நரிமன்பாயின்ட்டில் உள்ள நிர்மல் டவர், கோவாவில் உள்ள ரிசார்ட், டெல்லியில் உள்ள அலுவலகம், வீடு, மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலை உட்பட ஐந்து சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா முழுவதும் ரூ.500 கோடி மதிப்புள்ள 27 நிலங்கள் தற்காலிகமாக வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அஜித் பவார், அவரின் உறவினர்களின் பினாமிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர், பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அஜித் பவாரின் பெயரில் இல்லை. அவை அனைத்தும் அஜித் பவாருக்கு வேண்டப்பட்டவர்களின் பெயர்களில் இருந்தன என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் அதே கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சரத் பவாருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது சிவசேனா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மராட்டிய அரசியலில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று வேறு பட்னவிஸ் சொல்லியுள்ளார்..பார்ப்போம்..