ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன . இன்றைய பலன் 1.3.2024
மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் கனவு பலிதமாகும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி அன்பர்களே இன்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஒரு எண்ணம் பூர்த்தியாகும். வழக்கு வெற்றியாகும். நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு கட்டுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.
மிதுனம் ராசி அன்பர்களே இன்று குடும்ப சொத்து விவகாரம் பற்றி உறவினரிடம் ஆலோசிப்பீர்கள். பெரியோர் தலையீட்டால் சிக்கல்கள் தீரும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வீர்கள். உங்கள் செயல்களுக்கு பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்
கடகம் ராசி அன்பர்களே இன்று திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். திருப்புமுனையான நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். பணத்தடை விலகும். வழக்கு சாதகமாகும்.
சிம்மம் ராசி அன்பர்களே இன்று வேகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உடல்நிலை சீராகும். செயல்களில் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். கடன்களை அடைப்பீர்கள். வியாபாரம் விருத்தியாகும். நிதிநிலை குறித்த எண்ணம் மேலோங்கும். உங்கள் பேச்சு சாதுர்யத்தால் ஒரு செயல் லாபமாகும். புதிய பொருட்கள் சேரும்.
துலாம் ராசி அன்பர்களே இன்று உங்கள் அனுகுமுறையால் நீண்டநாள் பிரச்சினை தீர்விற்கு வரும். இறை வழிபாட்டால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர்கள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். மனதில் குழப்பம் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளால் மனம் சங்கடத்திற்கு ஆளாகும். வருமானத்தில் தடைகள் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த வருவாய் இன்று உங்களைத்தேடி வரும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சி வெற்றி தரும். உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். நெருக்கடிகள் நீங்கும்.
மகரம் ராசி அன்பர்களே இன்று வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.சொத்து விவகாரத்தில் ஆதாயமான நிலை ஏற்படும். வருவாய் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். மனதில் உண்டான பயம் விலகும்.
கும்பம் ராசி அன்பர்களே இன்று பெரியோர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் விருப்பங்கள் இன்று பூர்த்தியாகும். வருவாய் உயரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.
மீனம் ராசி அன்பர்களே நேற்றுவரை உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பும் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்நியரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். மனதில் நிம்மதி உண்டாகும். இறை வழிபாடு நன்மைதரும்.
ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் 9840820560