“ஒரு காலத்தில் 2G திமுகவுக்கு முடிவுரை எழுதியது, G2 (G-Square) என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” – ஊழல் பட்டியல் வெளியிடு அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு.
1, கற்பினி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அம்மா நியூட்ரிஷன் கிட் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெறும் நியூட்ரிஷன் கிட் ஆனது. அந்த கிட்டில் இருக்கும் மதர்’ஸ் ஹெல்த் மிக்ஸ் பெண்களுக்கு ஊட்டச் சத்து தருவது. ஹெல்த் கிட்டில் 80% விலை இந்த மிக்ஸுக்கு போகிறது. திமுக வந்தபின், இந்த ஹெல்த் மிக்ஸ் (Pro PL Mother’s Health Drink Powder) பற்றி டிபார்ட்மெண்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் கூட்டங்கள் போட்டு, தனியாரிடம் வாங்குவதற்கு பதில் அரசின் ஆவின் மூலம் இதை குறைந்த விலையில் கொடுக்கலாம் என்று 2022 மார்ச்சில் முடிவெடுத்தார்கள். (23 லட்சத்து 88 ஆயிரம் கிட் வாங்கப்படுகிறது). திடீரென ஏப்ரலில் அரசு நிர்பந்தம் காரணமாக இதே கமிட்டி கூட்டப்பட்டு, ஆவினிடமிருந்து வாங்குவதை நிறுத்துகிறார்கள். இந்த PL ஹெல்த் மிக்ஸ் ஆவினை விட 60% விலை அதிகம். இந்த நியூட்ரிஷன் கிட்-ஐ சப்ளை செய்வது – அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனம். இதே அனிதா டெக்ஸ்காட் தான் பொங்கல் தொகுப்பு சப்ளை செய்த கேந்திரிய பந்தாருக்கு சப்ளை செய்தது (வெல்லம் உருகுதய்யா…!). இதற்கு காரணம் திமுகவின் ஆடிட்டர் சண்முகராஜ் & அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏவின் மகன் கார்த்திக். அவர்களிருவரும் தான் இந்த கமிட்டியை மிரட்டி, அவர்கள் மார்ச்சில் ஆவினிடமிருந்து வாங்கும் முடிவை மாற்றியது. இதன் மூலம் அரசுக்கு ரூ 45 கோடி நட்டம். அதோடு, அந்த கிட்-இல் கொடுக்கக் கூடிய அயன் சிரப் – தமிழக மெடிக்கல் சப்ளைஸ் ரூ 42க்கு வாங்கும் போது, அனிதா டெக்ஸ்காட் ரூ 224 ரூபாய்க்கு சப்ளை செய்கிறது. 180 ரூபாய் அதிகம்! 32 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம். இந்த இரண்டு பொருட்களில் மட்டும் 77 கோடி நட்டம்.
ஆடிட்டர் சண்முகராஜும் அண்ணாநகர் கார்த்திக்கும் எல்லா டிபார்ட்மெண்டுகளையும் இன்ஃப்ளூயன்ஸ் செய்வது, சி.எம் செல்லுக்கு கூப்பிடுவது, ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் செகரட்டரியையும் மிரட்டுவது என செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு தருகிறோம்.இந்த ப்ரோ பி எல் நிறுவனத்தை விட்டு, ஆவினிடமிருந்தே ஹெல்த் மிக்ஸ் வாங்க வேண்டும் அரசு.2, அடுத்த விவகாரம்: சென்னையின் ஜி-ஸ்குயேரின் (G-Square) முன்னேற்ற கழகமாக மாறியிருக்கும் சிஎம்டிஏ (CMDA) பற்றி.
நாம் நிலம் வாங்கினால், முதலில் ஃபைல் சப்மிஷன் – ஒரு நாள்.சைட் இன்ஸ்பெக்ஷன் – 14 நாள். டாக்குமெண்ட்ஸ் – 15 நாள்.யுஏ லெட்டர் – 5 நாள்.அட்வைசரி ஃபீ கட்ட – 15 நாள்.ரோடு… – 10 நாள்.சப்மிஷன்… – 5 நாள்.ரிலீஸ்… – 10 நாள்.ரேரா அப்ரூவல் – 50 நாள்.+++++மொத்தம் – 200 நாள்! கோவையில் G-Square போட்ட 122 ஏக்கர் லே-அவுட் – மொத்தம் 8 நாட்களில் அப்ரூவல்.ஈகட்டூர் – 12 நவம்பர் டிடிசிபி அப்ரூவல்.
15 நவம்பர் – லோக்கல் பாடி அப்ரூவல். 20 நவம்பர் – ரேரா அப்ரூவல். (8 நாள்)!நீலாங்கரை – 25 ஜனவரி – 4 பிப்! 10 நாள்!(ரேரா மத்திய அரசு அமைப்பு என்றாலும், அங்கே நியமிக்கப்படுபவர்கள் மாநில அரசு செய்வது). G-Square இது வரை 15 மேஜர் லாண்ட் டிவலப்மெண்ட் எடுத்திருக்கிறார்கள். அனைத்துமே 25 நாட்களுக்குள் அப்ரூவல். இது எப்படி சாத்தியம் என்றால், விஞ்ஞான ஊழல் தீமுக ஆட்சிக்கு வந்ததும் போட்ட ஜி.ஓ (கவர்ன்மெண்ட் ஆர்டர்). ‘சிஎம்டிஏ அப்ரோவல் ஆன்லைன் மூலம் மட்டுமே நடக்கும். ஆஃப்லைனில் (நேரில்) யாருக்குமே அப்ரூவல் கிடையாது’ என்று அறிக்கை விட்டது. G-Square அப்ளிகேஷம் சப்மிட் பண்ணும் போது மட்டுமே இந்த ஆன்லைன் லிங்க் திறக்கும்!!! G-Square சப்மிட் செய்து முடித்ததும், இந்த ஆன்லைன் லின்க் மூடிவிடும். ‘G-Square தவிர வேறு யாருமே எங்கேயுமே நிலம் வாங்க கூடாது.” என்பது திட்டம். இதை சாத்தியமாக்க, CMDA, DTCP, RERA, CREDAI என அனைத்திலும் முதல்வர் குடும்பத்தின் முக்கியப் புள்ளிகள் உள்ளே நுழைந்துவிட்டார்கள்.இதை சாத்தியமாக்க, சிஎம்டிஏயில் புதிதாக சிஇஓ என்ற பதவியை உருவாக்கி G-Square வேலைகளை மட்டும் பார்க்கிறார்.
டிடிசிபியில் ருத்திரமூர்த்தி என்பவர் G-Square வேலைகளை செய்கிறார். ‘நான் ஆளும் கட்சி. என்னை ஒண்ணும் செய்ய முடியாது உங்களால்’ என்கிறார் இவர்.3, G-Square இப்போது மேலும் 6 கம்பெனிகள் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த ஆறும் எங்கெங்கே நிலம் வாங்கியிருக்கிறார்கள் என்பதை அடுத்த மாதம் வெளியிடுவோம்.– சன்ஷைன் ஹோல்டிங் இண்டியா பிரைவேட் லிமிடெட். (விடியல் மருமகன் மகள் டைரக்டர்கள்). — லோட்டஸ் டெவலப்பர்ஸ், ஹைதராபாத் – (விடியல் மருமகனும் பிரசாத் ரெட்டி என்பவரும் டைரக்டர்கள்). — லுக் அப் மெர்ச்சண்டைஸ் – (அண்ணாநகர் கார்த்திக், மருமகன் சபரீசனும் டைரக்டர்கள்). — மேக்ஸ் பேஸ் ரியாலிடி – (மருமகன் & அண்ணாநகர் டைரக்டர்கள்).– செசெக் ஹோல்டிங் – (மகள், மருமகன் & அண்ணாநகர்).– மன்னூர் வைட்ஃபீல்ட் – (அண்ணாநகர் கார்த்திக்கின் தாய் கீதா மோக்கன் & G-Square பாலாவின் துணைவியார் சசிகலா டைரக்டர்கள்).இவர்கள் அனைத்து இடங்களிலும் வேறு யாரும் நிலம் வாங்க முடியாமல் செய்கிறார்கள். “ஒரு காலத்தில் 2G திமுகவுக்கு முடிவுரை எழுதியது, G2 (G-Square) என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”
இதற்கு நிச்சயமாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பதில் சொல்ல வேண்டும். G-Square என்ற ஒரு நிறுவனத்துக்காக ஏன் டிப்பார்ட்மெண்ட் நடத்துகிறார்?G-Square பெயர் அதிகம் அடிபட்டதால், மேலும் 6 நிறுவனங்களை கொண்டு வந்து திசை திருப்புகிறார்கள். இந்த G-Squareக்கு எப்படி ஒரு வாரத்தில் அப்ரூவல் கொடுக்கிறீர்கள்? ஒரு மணி நேர காணொளியில் முதல் 20 நிமிடங்களில் மேற்சொன்ன விவரங்கள்!! மற்றவை பின்னர் அரசு அதிகாரிகளே எங்களுக்கு டாக்குமெண்ட் கொடுக்கிறார்கள்.
கட்டுரை:-செல்வநாயகம்.