கேரளாவில் 13 வயது சிறுமியை கூட்டு சேர்ந்து கற்பழித்த கயவர்கள்! நான்கு பேர் கைது!

கொரோனாவால் நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஆன்லைன் வகுப்பு என பள்ளிகளும் இறங்கி விட்டது. இதன் காரணமக மாணவ மாணவிகள் செல்போனும் கையுமாக இருக்கின்றார்கள். டிக் டாக் நிறுத்தப்பட்டுள்ளதால் அதிலிருந்து பல பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் முகநூலில் நண்பர்களாக பழகி ஏமாற்றி 13 வயது சிறுமியை சீரழித்த சம்பவம் நடந்தேறியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தரணி.முகநூலில் அறிமுகமான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியுடன் பழகியுள்ளார் எந்த நேரமும் முகநூலில் மூழ்கிய தரணி, அந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.பள்ளிகள் விடுமுறை என்பதனால் அந்த மாணவியும் தரணியுடன் எந்த நேரமும் சாட்டிங்கில் இருந்துள்ளார்.

முகநூலில் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் நேரில் சந்திக்கும் ஆவலுடன் இருந்துள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவருக்கு கோழிக்கோடு அடுத்த மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரும் மாணவி மீது காதல் வயப்பட்டு காதலை தெரிவித்துள்ளார்.

அதற்கு தான் ஏற்கனவே காதலில் விழுந்து விட்டதாகவும் , தனது முகநூல் காதலன் தரணி குறித்தும் விபின்ராஜிடம் தெரிவித்த மாணவி, நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று கூறியுள்ளார்.இதையடுத்து அவ்வப்போது விபின்ராஜ் மாணவியிடம் பேசி வந்த நிலையில் தான் கிருஷ்ணகிரியில் உள்ள காதலன் தரணியை சந்திக்க செல்வதாக கூறியுள்ளார்.

தானே காரில் சென்று விடுவதாக நம்பிக்கையூட்டிய விபின்ராஜ் , கடந்த 2ந்தேதி முக்கம் பகுதியில் இருந்து மாணவியுடன் காரில் புறப்பட்டுள்ளான். வழியில் தனது கூட்டாளிகளான அகித்ராஜ், ஜோபின் ஆகிய இருவரை காரில் ஏற்றிக் கொண்டுள்ளான்.நள்ளிரவு நேரம் காரில் மாணவி தூங்கிக் கொண்டிருந்த போது சாலையோரம் மறைவான இடத்தில் காரை நிறுத்தி விபின்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேந்த அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் காயங்களுடன் மாணவியை ஓசூர் பேருந்து நிலையத்தில் அனாதையாக இறக்கிவிட்டு சென்றுள்ளனர். அந்த பலாத்கார கும்பல். காதலனை சந்திக்க வந்த இடத்தில் ஆண் நண்பர்களால் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது காதலனுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த முக நூல் காதலன் தரணி, இது தொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்காமல், தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று வாழ்க்கை கொடுப்பதாக ஆறுதல் கூறி அங்கு வைத்து அவனும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் முக்கம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். மாணவி பயன்படுத்திய செல்போனின், சிக்னலை வைத்து கிருஷ்ணகிரியில் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் அந்த மாணவியை மீட்டதோடு, முக நூலில் பழகி மைனர் பெண்ணின் மனதை கெடுத்து வாழ்க்கை சீரழிவிற்கு காரணமான காதலன் தரணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தன்னை காரில் அழைத்துச் சென்ற 3 பேர் பலாத்காரம் செய்ததாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளத்தை சேர்ந்த ஆண் நண்பர்கள் விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.அதே நேரத்தில் படிக்கின்ற வயதில் முகநூலில் மூழ்கியதால், காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இந்த பள்ளி மாணவி சாட்டிங்கில் மூழ்கும் பள்ளி படிக்கும் மாணவிகள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! நன்றி : பாலிமர் செய்திகள்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version