ஸ்டாலினை சந்தித்த கவுதம் அதானி! இனி கனிமொழி எப்படி பாராளுமன்றத்தில் பேசுவார்!

Adani mkstalin

Adani mkstalin

இந்திய பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான கௌதம் அதானி அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். கனிமொழி மற்றும் திமுகவினரால் மோடியின் சாகாக்கள் என கூறும் கௌதம் அதானியின் சென்னை வருகை குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மேலும், தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகள் நடத்த கௌதம் அதானி சென்னை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் தமிழ்நாட்டில் பல கோடிக்கு முதலீடு செய்வதற்காக ஒப்பந்தங்கள் செய்திருந்தது.

மொத்தம் ரூ.42,768 கோடி முதலீடு செய்கிறது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.24,500 கோடி முதலீடு செய்கிறது. .இதேபோல் அதானியின் அம்புஜா சிமெண்ட் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது. அதானி கனெக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ13,200 கோடி முதலீடு செய்கிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,568 கோடி முதலீடு செய்கிறது.

இந்நிலையில், கௌதம் அதானி சென்னை வந்திருப்பதால் பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்யும் திட்டம் குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த வந்திருக்கலாம் எனவும், தமிழ்நாட்டில் இரண்டு பெரிய தொழிற்சாலைகளை அதானி குழுமம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதன் காரணமாகவும் அவர் சென்னையில் ஆலோசனை நடத்த வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா உற்பத்தி துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குக் கப்பல் போக்குவரத்து மிகவும் முக்கியமாகும். ஆனால் சந்தையில் ஏற்கனவே சரக்கு கப்பல்களுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு நிலவுகிறது. இதேவேளையில் உலகளவில் முன்னணி கப்பல் கட்டும் தளங்கள் அனைத்திலும் 2028ஆம் ஆண்டு வரை கப்பல் கட்டுமானத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கப்பல் உரிமையாளர்கள் புதிய கப்பல்களை கட்டுவதற்கான மாற்று உற்பத்தி தளங்களைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய தயாரிப்புகளை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லவும், சர்வதேச சந்தையில் சரக்கு கப்பல்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டையும் சரி செய்ய அதானி குழுமம் களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான முந்திராவில், அதானி குழுமம் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.

முந்திரா துறைமுகம் ஏற்கனவே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில், இதே பகுதியில் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளார் கௌதம் அதானி. திடீரென கப்பல் கட்டுமானதில் அதானி குழுமம் இறங்க மற்றொரு முக்கிய காரணமும் உண்டு.அதானி குழுமத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த கப்பல் கட்டுமான திட்டம், 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரா துறைமுக விரிவாக்கத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தின் நிர்வாகம் கடந்த அதிமுக ஆட்சி 2018ம் ஆண்டு அதானி துறைமுகம் – சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இதனை 6,110 ஏக்கரில், 34 சூரிய மின்சக்தி திட்டங்களுடன் விரிவாக்கம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அப்படி விரிவாக்கம் செய்யப்படும் போது, தென்னிந்தியாவிலேயே பிரம்மாண்டமான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட துறைமுகமாக காட்டுப்பள்ளி துறைமுகம் உருவெடுக்கும்.

எப்போதும் போல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று தேர்தல் வாக்குறுதியளித்தது தி.மு.க. அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது காட்டுப்பள்ளி மீனவ மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எதிரானதென்பதை உணர்ந்து அம்மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இக்கார்ப்பரேட் திட்டங்களை முறியடிக்க உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என திமுக போராட்ட களத்தில் இறங்கியது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் விரிவாக்கத் திட்டத்திற்கான முயற்சிகளைத் தடுக்காமல் இருப்பது மட்டுமின்றி, மக்களிடம்கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதற்கு அனுமதியும் வழங்கி அதானிக்கு கார்ப்பரேட் சேவகம் செய்கிறது.

Exit mobile version