கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோவா மாநில முன்னாள் முதல் வரும் போண்டா தொகுதியின் இப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவான ரவிநாயக் காங்கிரசில் இருந்து விலகி கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ள தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார்.
இந்த நிலையில் இன்னொரு தகவலும்வெளி வருகிறது. அது என்னவென்றால் கோவா மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்த வரும் வடக்கு கோவாவில் உள்ள பொரியெம் சட்டமன்ற தொகுதியின் நிரந்தர எம்எல்ஏவாக உள்ள பிரதாப் சிங் ரானேவை தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியதன் மூலமாக அவரும் பிஜேபியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன.
ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் இ ணைந்த கோவா பார்வர்டு பார்ட்டியின் சாலிகோவா தொகுதியின் எம்எல்ஏவா ன முன்னாள் அமைச்சர் ஜெயேஷ் சல்கோன்கரை மறுபடியும் பிஜேபிக்கு கொண்டு வந்து இருக்கிறார் பட்னாவிஸ்.ஜெயேஷ் சல்கோன்கர் மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்த பொழுது அவர் அமைச்சரவையில் இருந்தவர்.
முன்னாள் அமைச்சர் ஜெயேஷ் சல்கோன்கர்,முன்னாள் முதல்வர் ரவி நாயக் அடுத்து முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரதாப் சிங் ரானே என்று வடக்கு கோவாவில் உள்ள வலுவான தலைவர்களைபிஜேபி வளைத்துக் கொண்டுவருகிறதுவளைத்து வருகிறார் பட்னாவிஸ்.கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் கோ வாவில் பிஜேபி காங்கிரசை விட பின் தங்கி ஆட்சியை இழக்கும் நிலையில் இருந்த பிஜேபியை மத்திய அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரை அனுப்பி கோவா ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வைத்தார் அமித்ஷா.
இப்பொழுது அமித்ஷாவுக்கு வேலையேகொடுக்காமல் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் மிகஅற்புதமாக கோவா வில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறா ர்.சுமார் 17 லட்சம் மக்கள் தொகையே உடைய கோவா மாநிலத்தில் 66 சதவீதம்இந்துக்களும் 25 சதவீதம் கிறிஸ்தவர்களும் 9 சதவீதம் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.
கி்பி 1510 ல் இருந்து 1961 வரை இருந்த போர்த்து கீசியர்கள் ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக இருந்த கோவா 1961ல்க்கு பிறகு இந்துக்கள் மெஜாரிட்டி மாநிலமாக மாற முக்கியமான காரணம் மராட்டியர்கள்.போர்த்துகீசியர்கள் காலத்தில் கோவாவி ல் சுமார் 65சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்கள் இப்பொழுது 25 சதவீதமாக குறை ந்த்தற்கும் 34 சதவீதமாக இருந்த இந்து க்கள் இப்பொழுது 66 சதவீதமாக உயர்ந்தற்கும் மராட்டியர்களே காரணம்.மகாராஷ்டிராவின் அண்டை மாநிலமானகோவாவில் மகராஷ்டிராவை ஒட்டியவடக்கு கோவாவில் தான் இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அதிலும் மராட்டியர்கள் அதிமாக இருக்கிறார்கள். இதனால்தான் பிஜேபி இந்துத்வா அரசிய லைமுன் வைத்து கோவாவை கைப்பற்ற முடிந்தது.
கோவாவில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் வடக்கு கோவாவில் 23 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது தெற்கு கோவாவில் 17 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.வழக்கமாக பிஜேபிவடக்கு கோவாவில் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி விடும்.2012 கோவா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி வென்ற 21 தொகுதிகளில் 13 தொகுதிகள் வடக்கு கோவாவில் இருந்து கிடைத்தவை தான். கோவா பிஜேபியின் தலைவர்கள் அனைவரும் வடக்கு கோவாவில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதே வழக்கம்.
கோவா பிஜேபியின் அடையாளமாக இருந்த முன்னாள் கோவா முதல்வர் மனோக ர் பாரிக்கரின் சொந்த தொகுதியான பனாஜியும வடக்கு கோவாவில் தான் இருக்கிறது. கோவாவில் பிஜேபி வளர ஆட்சியை கைப்பற்ற துணை நின்ற வடக்கு கோவா கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை கவிழ்த்து விட்டது.
கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் வடக்கு கோவாவில் பிஜேபி 8 தொகுதிகளில்வெற்றி பெற்று இருந்தது.காங்கிரஸ் 9தொகுதிகளிலும் மகாரஸ்டிராவாதி கோ மந்த கட்சி 2 தொகுதிகளிலும் கோவா பார்வார்டு கட்சி 2 தொகுதிகளிலும் 2 சு யேச்சைகளும் வெற்றி பெற்று இருந்தார்கள்.தெற்கு கோவா கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதி என்பதால் அது எப்பொழுதும் காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில்தெற்கு கோவாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் பிஜேபி 5 தொகுதிகளிலும் மகாராஷ்டிராவாத கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்ட் பார்ட்டி தலா 1 தொகுதி களிலும் சுயேச்சை 2 தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தார்கள்.
மனோகர் பாரிக்கருக்கு பதிலாக முதல்வர் பதவியை ஏற்று இருந்த லஷ்மிகாந்த் பர்சேகர் ஒரு சிறந்த அரசியல்வாதி அல் ல என்பதற்கு 2017 கோவா தேர்தலில் அவர் வகுத்த தேர்தல் வியூகங்களினால் அவரே அவருடைய சொந்த தொகுதியான வடக்கு கோவாவில் உள்ள மன்ட்ரேம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிடம் படு தோல்விஅடைந்ததில் இருந்தே அறிந்துகொள்ளலாம் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வர் பதவியில் இருந்து இறங்கி இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக உட்கார்ந்த உடனே கோவாவில் பிஜேபி ஆட்டம் காண ஆரம்பித்தது.
பாரிக்கருக்கு பிறகு முத ல்வரா க வந்த லக்ஷ்மிகாந்த் பர்சேகர்க்கு ம் பிஜேபி கூட்டணியில் இருந்த மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்கும் முட்டல் வந்து கூட்டணியை விட்டு வெளியேறிய து.இதோடு கோவா மாநில பிஜேபி அரசின் கல்விகொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி தலைமையுடன் மோதலில் ஈடு ப ட்ட கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் சுபாஷ் வெலிங்கர் ஆர்எஸ்எஸ் அமை ப்பில் இருந்து நீக்கப்பட அவரும் கோவா சுரக்சா மன்ச் என்ற பெயரில் புதிய கட்சி யைத் தொடங்கினார்.
இந்த கட்சியும் ஏற்கனவே பிஜேபி மீதுகோபத்தில் இருக்கும் சிவசேனாவும் ஒ ன்று சேர்ந்து மகாராஷ்டிரவாதி கோமந்த க் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொ ண்டு கோவாவில் பிஜேபியை எதிர்த்துஅனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட து.பிஜேபியுடன் கூட்டணியில் இருந்த கட்சி கள் ஒன்றுகூடி பிஜேபியை எதிர்த்தால் பிஜேபிக்கு எப்படி வெற்றிகிடைக்கும் ?
பதிவான வாக்குகளில் சுமார் 11% ஓட்டு க்களை பெற்று பிஜேபியை வடக்கு கோ வாவில் தோல்வியடைய செய்தது மகா ராஷ்டிரவாதி கோமந்த கட்சி.இந்த முறை கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர பட.டாவிஸ் மற்றும் கோவா முதல்வர் பிர மோத் சவந்த் இருவரும் இணைந்து மிகஅற்புதமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்கள். இந்த முறை பிஜேபி எந்த கூட்டணியும்இல்லாமல் தனித்தே 40 தொகுதிகளிலும்போட்டியிடுகிறது.
வடக்கு கோவாவில்உள்ள 23 தொகுதிகளையும் கைப்பற்றபிஜேபி தேர்தல் வியூகங்களை வகுத்துவருகிறார்கள்.இதனால் வடக்கு கோவாவில் இப்பொ ழுது எம்எல்ஏக்களாக உள்ள கோவா பார்வடு பார்ட்டியின் முன்னாள் அமைச்சர்ஜெயேஷ் சல்கோன்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ரவி நாயக். அடுத்து பிரதாப்சிங் ரானே என்று வடக்கு கோவாவில்செல்வாக்கு உள்ள தலைவர்களை பிஜேபி வளைத்து இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் பிஜேபி கூட்டணிஅரசில் இருந்த மகாராஷ்டிரவாத கோம ந்த கட்சி இப்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் உடன் கை கோர்த்து இருக்கிறதுஇந்த கூட்டணி வடக்கு கோவாவில் மட்டுமல்ல தெற்கு கோவாவிலும் காங்கிரஸ் ஓட்டுக்களை காலி செய்து விடும்.ஏனென்றால் முன்னாள் கோவா காங்கி ரஸ் முதல்வராக இருந்த லூய்ஷின்கோ பலைய்ரோவை ராஜ்யசபா எம்பியாக்கி தெற்கு கோவாவில் களம் இறக்கி இருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.
மகாராஸ்டிராவாத கோமந்த கட்சி சுமார் 50 வருடங்களாக கோவா அரசியலில்செல்வாக்குடன் உள்ள கட்சி.கோவா இந்துக்கள் குறிப்பாக மராட்டியர்கள் இடை யே செல்வாக்கு உள்ள மகாராஸ்டிராவாத கோமந்த கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணி காங்கிரஸ் ஒட்டுக்களை வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா இரண்டிலும் காலி செய்யும்.ஆக கோவாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி 25+ அல்லது 30+ தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்யும் என்று உறுதியாக நம்பலாம்.கோவாவில் பட்னாவிஸ் பிஜேபிக்கு பெற்று கொடுக்கும் வெற்றி அவரை 2022 மார்ச் மாதத்தில் மகாராஷ்டிரா முதல்வராக மீண்டும் அமரவைக்கும்.
கட்டுரை :- எழுத்தாளர் விஜய குமார் அருணகிரி…