இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் ! காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது.

தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில் அரங்கேறியது. தற்போது சினிமாவிற்கு அடுத்த தளமான வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளமான ஜீ 5 ல் வெளியாகி உள்ள ‘காட்மேன்’ டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது இந்துக்களிடையே மன உளைச்சளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவிற்கு தணிக்கை உள்ளது. ஆனால் இந்த வெப்தொடர்களுக்கு தணிக்கை இல்லாததால் படைப்பாளிகள் தங்களின் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளையும், வன்முறை காட்சிகளையும் வலிய புகுத்தி வந்தனர். இப்போது மத ரீதியான சர்ச்சைகளையும் கையில் எடுக்க தொடங்கிவிட்டனர். தொலைக்காட்சி நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் கம்யூனிஸ்ட் மற்றும் இந்து மதத்தினை எதிர்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். அவர்களால் தான் இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெறுவதற்கு காரணம் ஆகும்.

இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்களின் கோரிக்கை வலுத்தது. இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார், காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், ”எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது” என பதிவிட்டுள்ளது

Exit mobile version