பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்ற தங்க மங்கை அவனி லெக்ரா!

ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் முதல் தங்கம் ஆகும். நேற்று டேபிள் டென்சில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் இன்று மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெக்ரா தங்கம் வென்றார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுபோல் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார். ஒரே நாளில் இந்தியாவுக்கு இன்று 2 பதக்கம் கிட்டியுள்ளது.

வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற வினோத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் தகவல் வெளியிட்ட பிரதமர் கூறியதாவது:

‘‘வினோத் குமாரின் அற்புதமான செயல்பாட்டுக்கு இந்தியா மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறது! வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்பு மற்றும் உறுதி, சிறந்த முடிவுகளை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“டோக்கியோவிலிருந்து மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது! ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. தலைசிறந்த திறமை மற்றும் உறுதித் தன்மையுடன் பாராட்டத்தக்க தடகள வீரராக அவர் திகழ்கிறார். அவருக்கு வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு பிரதமர், திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘பாவனா படேல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்! வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்கு வழங்கியுள்ளார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிப்பதுடன், விளையாட்டை நோக்கி அதிக இளைஞர்களை ஈர்க்கும்.

Exit mobile version