ஆளுநரை சிறுபிள்ளை என சட்டசபையில் பேசிய கம்யூ எம்எல்ஏ-நயினார் நாகேந்திரன் ஆவேசம் !

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பத்து சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றிட அரசு சார்பில் தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்பொழுது ஆளுநர் ரவி சிறுபிள்ளைத் தனமாக செயல்பட்டு வருகிறார் என சிபிஐ கட்சியின் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் பேசியதற்கு, பாஜக ட்டமன்ற குழு தலைவர்  நயினார் நாகேந்திரன் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு சிறுபிள்ளை என்பது குழந்தைத்தனத்தை குறிப்பிடுவதுதான். அதில் அநாகரீகம் எதுவும் இல்லை என அமைச்சர் துரை முருகன் பதில்கூறினார்.

இதற்கு நெல்லை பகுதியில் வேறு விதமாக புரிந்துகொள்ளப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியதால்,தொடர்ந்து சபாநாயகர், ’நீங்கள் சொன்ன வார்த்தையெல்லாம் நீக்கிவிடுகிறேன்’ என்று கூறினார். அந்த வார்த்தையை ராமச்சந்திரன் திரும்பப் பெற்று, குழந்தைத்தனமாக என மாற்றிக்கொண்டார்.

Exit mobile version