இயக்குனர் கவுதமன் காரி துப்பிய சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ! உண்மையை மறைக்க திட்டமிட்டு வன்னியர் குறியீடுகளை புகுத்தியுள்ளார்கள்!

நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். இது திட்டமிட்டு உண்மையை மறைத்து எடுக்கப்பட்ட படம். உண்மையாக போராடியவரை மறைத்துவிட்டு கலவரத்தினை உப்பிடக்கும் விதத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படம் தான் இந்த ஜெய் பீம். ‘ஒரு படைப்பு சமூகத்தை பண்படுத்த வேண்டுமே தவிர, புண்படுத்தக் கூடாது’ என, நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கார்ப்பரேட் ஒடிடி மூலம் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.மேலும் உண்மை கதைக்களம் கொண்ட இந்த படம் சித்தரிக்கபட்டு உண்மையை மறைத்து எடுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே சாதிய மோதலை உண்டாக்கும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் இந்த ஜெய் பீம்.

இத்திரைப்படம் குறித்து வன்னியர் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் ரசிகர்மன்றங்கள் கலைத்துள்ளார்கள். உண்மையை திரித்து வன்னியர்களை குற்றவாளி என்று சித்தரிக்கும் விதமாக சில காட்சிகள் இப்படத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம். வழக்கிற்காக போராடிய கோவிந்தன் படையாச்சியை இருடடிட்ப்பு செய்துள்ளது.

நிஜ சம்பவத்தில் வக்கீலாக பணியாற்றியவர் சந்துரு. இந்த திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்துருவாகவே பயன்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்துள்ளார். அதேபோல கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கண்ணு. திரைப்படத்திலும் அவரது பெயர் ராஜா கண்ணுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொலையாளி கிறிஸ்தவரான அந்தோணிசாமியின் பெயர் மாற்றப்பட்டு இந்து பெயரான குருமூர்த்தி என்று திணிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டில் வன்னியர் சமுதாய குறியீடுகளை கேலண்டர் மூலம் திட்டமிட்டு வெளிப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து இயக்குனர் கவுதமன் பொங்கியுள்ளார்! அவர் ஜெய் பீம் குறித்து பேசியதாவது: உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்தி விட்டு, படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், தமிழ் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான, அக்னி குண்டத்தை திட்டமிட்டு, நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாக காட்சிப்படுத்திய, நடிகர் சூர்யாவையும், இயக்குனர் ஞானவேலுவையும் கண்டிக்கிறேன்.

ஒரு படைப்பு என்பது எப்போதும், தன் சமூகத்தை பண்படுத்த வேண்டும்; புண்படுத்திவிடக் கூடாது. ஒரு கலவரத்தை படைப்பாக்கலாம். ஆனால், ஒரு படைப்பு ஒரு போதும் கலவரத்தை உருவாக்கிட கூடாது. அந்தோணிசாமி என்கிறவர் செய்தது, ஒரு மன்னிக்க முடியாத குற்றம். அவன் தவறு செய்தான் என்பதற்காக, அவன் சார்ந்த சமூகத்தையோ, மதத்தையோ கூட குற்றம் சுமத்துவது நேர்மையாகாது.

ஆனால், நீங்கள் அதையும் தாண்டி, அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக, குருமூர்த்தி என பெயரிட்டு குருவையும், அக்னி குண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்தியது, அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி, நீங்கள் செய்த மாபெரும் தவறு.

மேலும், ‘இந்த வழக்கில் நீதி கிடைத்த பின் தான் திருமணம் செய்து கொள்வேன்’ என, அந்த குரலற்றவர்களின் குரலாக இறுதி வரை உயிர் உருக அருகில் நின்ற, கோவிந்தன் யார் என்பதையும், அவரின் தியாகத்தையும் மறந்தீர்களா அல்லது மறைத்தீர்களா?

சில நுாற்றாண்டுகளாகவே இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம், தங்களின் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் தமிழர்களுக்குள் நிரந்தர பகையை உருவாக்கி குளிர் காய்கின்றது. நேர்மையற்ற காட்சியை நீக்குவதோடு, தங்களையும் சரி செய்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version