Saturday, June 14, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி 2024 – சிம்ம ராசிகாரர்களுக்கு முன்னேற்றத்தையே வழங்குவார் குரு! திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

Oredesam by Oredesam
April 30, 2024
in ஆன்மிகம், செய்திகள், ராசிபலன்
0
சிம்மம் குரு பெயர்ச்சி

சிம்மம் குரு பெயர்ச்சி

FacebookTwitterWhatsappTelegram

சிம்மம்
மகம், பூரம், மற்றும் உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கும்; ராசி எதுவென்று தெரியாத ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; மா, மி, மு, மே, மோ, மௌ, ட, டி, டு, டே … எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்

ராசியின் அதிபதி: சூரியன். நட்சத்திர அதிபதிகள்: கேது, சுக்கிரன், சூரியன். யோகாதிபதிகள்: சூரியன், செவ்வாய், குரு. மாரகாதிபதிகள்: சுக்கிரன், குரு.

READ ALSO

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!


செயற்கரிய செயல்களைச் செய்யும் சிம்மம்

ஆற்றல்காரகனான சூரியனை ராசி நாதனாகக்கொண்டு, புகழ்மிக்கவர்களாக வாழ்ந்துவரும் சிம்ம ராசி நண்பர்களே!

எந்த நிலையிலும் எதற்காகவும் அச்சம் கொள்ளாமல், எது வந்தாலும் துணிந்து நிற்கும் ஆற்றலும், விடாமுயற்சியால் வெற்றியை எட்டும் குணமும், மனதில் அச்சம் உண்டானாலும் அதை வெளியில் காட்டாமல் எப்போதும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன், எங்கும் எதிலும் தனித்துவத்துடன் விளங்கும் யோகமும் பெற்றவர்கள் நீங்கள்.

பணம், பொருள் என்பவற்றைக்காட்டிலும் புகழுக்கு முக்கியத்துவம் கொடுப்பவரான நீங்கள், எந்த எதிர்ப்புக்கும் எப்போதும் அஞ்ச மாட்டீர்கள். பின் விளைவுகளை நினைத்து பயந்துவிடவும் மாட்டீர்கள். நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்பதே உங்களின் லட்சியமாகவும் நோக்கமாகவும் இருக்கும்.

உங்கள் ராசியில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் அதிகாரம் செலுத்துகின்ற பணியிலும், நிர்வாகத்திலும், அரசு வேலைகளிலும், அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும் பணியில் இருப்பீர்கள். காரணம், உங்கள் ராசிநாதனான சூரியன் ராஜ கிரகம் என்பதுதான். நீங்கள் முயற்சியே செய்யாவிட்டாலும் அத்தகைய தொழில் அமைப்பு இயற்கையாகவே உங்களுக்கு அமைந்துவிடும். அதேபோல் நீங்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அங்கே உயர்ந்த இடத்தை அடைந்து விடுவீர்கள். உங்களில் பெரும்பாலோருக்கு அரசியல் ஈடுபாடும், சமூக சேவையில் நாட்டமும் இருக்கும் என்பதால், உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

உங்கள் ராசிநாதனான சூரியன் ஆட்சி, உச்சம், நட்பு என்ற நிலையில் உங்கள் ஜாதகத்தில் இருந்துவிட்டால் அதிகார பதவிகளில் மட்டுமல்ல அரசியலிலும் நீங்கள் முதலிடம் வகிப்பீர்கள். எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று உங்கள் வளர்ச்சி உயர்ந்து கொண்டே இருக்கும். செய்யும் தொழிலில்கூட நீங்கள்தான் முதலிடம் வகிப்பீர்கள். அத்தகைய சுதந்திரமான தொழில்களையே நீங்கள் தேர்வு செய்வீர்கள். அதில் படிப்படியாக உயர்வுபெற்று வளர்ந்து நிற்பீர்கள்.

உங்கள் வாழ்க்கை என்பது உங்கள் குடும்பத்தைச் சார்ந்ததாக இருப்பதைவிட பொதுநலத்தை முன் கொண்டதாகவே இருக்கும். ஊருக்காக உழைப்பதிலும், பொதுமக்களுக்காக சிந்திப்பதிலும் நீங்களே முதன்மையானவராக இருப்பீர்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்த்து பேசாதவர்கள் நீங்கள் என்பதால், உங்கள் குரலில் வேகம் இருக்கும். பணிந்து போவது என்பது உங்களுக்குத் தெரியாத ஒன்றாகவே இருக்கும் என்பதால், மனதில் தோன்றியதை வெளிப்படையாகப்பேசி மற்றவர்களின் வெறுப்பிற்கும் ஆளாவீர்கள். இதனால் உங்கள் செல்வாக்கு உயர்வதுபோல் நாளுக்குநாள் உங்களுக்கு எதிரிகளும் அதிகரிப்பார்கள்.
குடும்பத்தினரும் உங்கள் பேச்சுக்களால் உங்கள் மீது வெறுப்படைவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை விட்டு விலக ஆரம்பித்து விடுவார்கள். இந்த நிலையானது உங்கள் ராசிநாதனான சூரியன் உங்கள் ஜாதகத்தில் பாதகமான நிலையில் அமைந்திருந்தால் மட்டும்தான். சாதகமாக அமைந்திருந்தால் நீங்கள் செல்வாக்குடன் திகழ்வீர்கள். அதனால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிரிகள்கூட உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதியும், அட்டமாதிபதியுமான குரு பகவான் உங்கள் ராசிநாதனான சூரியனுடன் இணைந்தோ, பார்த்தோ, சாரமோ பெற்றிருந்தால் உங்களிடம் நிர்வாகத் திறமை நிறைந்திருக்கும். எந்தத்துறையில் இறங்கினாலும் அங்கே முதல் இடத்திற்கு வந்துவிடுவீர்கள். அரசியல் ஈடுபாடும், பிரபலமாகும் யோகமும் உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் இயற்கையாகவே உங்களிடம் அமைந்திருக்கும். ஊரிலும், அரசியலிலும் பிரமுகராக விளங்குவதுடன் தொழிலதிபராகவும் விளங்குவீர்கள்.

எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் கொண்ட கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். சுதந்திரமாக இருப்பதே உங்களுக்குப் பிடிக்கும் என்பதால் உற்றார் உறவினர்களின் ஆதரவு எதிர்பார்க்கும் வகையில் இல்லாமல் போகும். எதையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுத்திடக் கூடியவரான நீங்கள், அடுத்தவர் நலனுக்காக எடுத்த காரியங்களை உடனுக்குடன் முடித்துக் கொடுப்பீர்கள். பதவிகளும் கௌரவமும் உங்களைத்தேடி வரக்கூடிய அளவுக்கு உங்களின் செயல்பாடுகள் இருக்கும்.

குறைந்தபட்சம் உங்கள் பகுதியிலாவது நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் பிறவிச் சொத்தாகவே இருக்கும். முரட்டுத்தனமான வேகமும் உங்களுடன் பிறந்தவையாக இருக்கும் அசாத்திய துணிச்சலுடன் எந்த ஒன்றையும் எப்போதும் எதிர்கொள்வீர்கள்.

திருமண வாழ்க்கை என்பது உங்களுக்கு தாமரை இலையின்மேல் தண்ணீராகத்தான் இருக்கும். நீங்கள் கனவு கண்ட வாழ்க்கை ஒன்றாகவும், அமைந்த வாழ்க்கை வேறாகவும் இருக்கும். நூறு சதவிகிதம் அந்நியத்தில் மட்டுமே உங்களுக்குத் திருமணம் நடக்கும் என்றாலும், திருமணத்திற்குப் பின்னும் நீங்கள் உங்கள் துணைக்கு கட்டுப்பட்டவராக இருக்க மாட்டீர்கள். கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டுமென உறவுகள் வற்புறுத்தினாலும் எலி வளையாக இருந்தாலும் தனி வளைதான் என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். குழந்தை பாக்கியத்தில் குறைவில்லாத உங்களுக்குப் பெண் குழந்தையைவிட ஆண் வாரிசுகளே அதிக அளவில் இருக்கும்.

மற்றவர்களின் வழிகாட்டுதலை எந்தக் காலத்திலும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள். ஆனால், நண்பர்கள்போல் ஒரு சிலர் உங்களிடம் பழகி உங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் நயவஞ்சகமாக செயல்படுவார்கள். பிரகாசமான நெருப்பையும் தண்ணீரால் அணைத்துவிடமுடியும் என்பதுபோல் தவறானவர்களின் அன்பிலும் சதியிலும் நீங்கள் வீழ்ந்து போகவும் வாய்ப்புண்டு. என்றாலும், சூரியனைப்போல் மீண்டும் நீங்கள் வலம்வர ஆரம்பித்து விடுவீர்கள்.

சேமிப்பு, சிக்கனம் என்பதில் கவனமாக இருப்பீர்கள். அதனுடன், இருப்பதை வைத்துக்கொண்டு அதற்கேற்ப வாழக்கூடியவராகவும் இருப்பீர்கள்.

இவையெல்லாம் சிம்ம ராசியில் பிறந்தவர்களின் பொது நிலையாகும். நீங்கள் சிம்ம ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும். உங்கள் ராசிநாதனின் நிலை வேறுபட்டிருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும். பொதுவாக ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பலன்களை நாம் அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்கள் வழியே நன்மைகள் உண்டாகிட வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயற்சியை நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.

பதவியைப் பறிக்குமா பத்தாம் இட குரு?

கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான சிம்ம ராசிக்கு 9 ம் வீடான மேஷத்தில் சஞ்சரித்து உங்களுக்கு யோகமான பலன்களை வழங்கிவந்த குரு பகவான், 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு 10 ம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சியாகி அந்த வீட்டிற்குரிய பலன்களை உங்களுக்கு வழங்கிடப் போகிறார்.

குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது அந்த ஜாதகரின் நிலையை உயர்த்துவார். வெளியூருக்கு செல்ல வைத்து நன்மைகளை வாரி வழங்குவார் என்பது பொதுவான விதி. அதனால் உங்களுக்கு பாக்ய குருவின் காலம் பல வகையிலும் யோகமாகவே இருந்திருக்கும்.

சரி; நடந்ததெல்லாம் சரியாகவே நடந்தது. இனி என்ன நடக்கப்போகிறது? என்பதுதானே உங்கள் கேள்வி! பத்துக்கு வரும் குரு பகவான் வழங்கும் பலன்பற்றி…. ‘ஈசனாரொரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்…..’ என்று பழம் பாடலில் பதில் கூறப்பட்டுள்ளது.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது தரித்திரமான நிலையும், சங்கடமான சூழ்நிலைகளும் உருவாகி அவதிக்கு ஆளாகிட வேண்டுமாம். பத்தாம் இடத்தில் குரு பகவான் அமரும் நிலைக்குறித்த பொதுவான பலன் இது. குரு பகவானை பொருத்தவரை பத்தாமிட சஞ்சாரம் பாதகமானதாகவே கூறப்படுகிறது.

பத்தில் குரு பதவியைப் பறிப்பான் என்றும் சொல்வார்கள். அப்படியென்றால் அடுத்த குருப்பெயர்ச்சி வரை எங்களுக்கு சோதனைக் காலம்தானா? நன்மைகள் நடக்க வாய்ப்பே இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இக்காலத்தில் உங்கள் சுய ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால், தசாபுத்தியும் நன்றாக இருந்தால் இந்தப்பலனில் நிச்சயம் மாறுதல் இருக்கும்.

சரி, பத்தாம் இடத்திற்கு வரும் குரு பகவான் என்னதான் செய்வார்? உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்குவார்? ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது ஜீவன ஸ்தானம். ராஜ்ய ஸ்தானம். கர்ம ஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தை வைத்துதான் தொழில், வியாபாரம், வேலை, அரசியல் ஈடுபாடு, பட்டம், பதவி பெறுதல், வசதி வாய்ப்புகள், புகழ்பெறுதல், நிர்மானப் பணிகளில் ஈடுபடுதல் போன்றவற்றை நம்மால் தீர்மானிக்க முடியும்.

குரு பகவான் தான் சஞ்சரிக்கும் இடத்திற்கு பாதகமான பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப்போகும் குரு பகவான், முதலில் நீங்கள் செய்கின்ற தொழிலில் தேக்க நிலையை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றத்தையும் அதனால் சங்கடங்களையும் உண்டாக்குவார். முதலாளியோ, மேல் அதிகாரியோ இக்காலத்தில் அவர்களால் உங்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். பார்த்துவரும் பணியில் இறக்கம் ஏற்படும். அதனால், இந்த வேலையே வேண்டாம் என்று வேலையை விட்டு விலகும் எண்ணமும் உங்களில் சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்வீர்கள் என்றாலும், அதில் வெற்றி அடைய முடியாமல் போகும். தேவையற்ற முயற்சிகளால் அலைச்சல் அதிகரிக்கும். அதே நேரத்தில் வருமானம் குறைவதால் டென்ஷன் அதிகமாகும்.

இக்காலத்தில் வீட்டில் இருக்கும் பொன் பொருட்களை விற்கவேண்டியதாக இருக்கும். வீட்டில், கணவன் மனைவிக்குள் மனச்சங்கடங்கள் உண்டாகும். கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பெற்றோருடனும், சகோதர சகோதரிகளுடனும் சங்கடங்கள் ஏற்படும். சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று வசிக்க வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். அக்கம் பக்கத்தினரால் தொல்லைகள் உண்டாவதுடன் நெருங்கிய உறவினருக்கு இக்காலத்தில் கண்டமும் ஏற்படலாம். பொதுவில் இக்காலத்தில் எல்லா வகையிலும் நெருக்கடிகளே இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்து நிதானித்து செயல்பட்டால் மட்டுமே இழப்புகளை தவிர்க்கலாம்.

பத்தாம் இடத்தில் அமருகின்ற குருபகவான் அந்த ஸ்தானத்திற்கு பாதகமான பலன்களை வழங்கினாலும், அவர் பார்க்கும் இடங்களுக்கெல்லாம் நற்பலன்களை வழங்கிடப் போகிறார் என்பதால், துன்பத்திலும் இன்பம். சங்கடத்திலும் நன்மை என்று நற்பலன்களையும் இக்காலத்தில் காணப்போகிறீர்கள்.

பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் அங்கிருந்து தன்னுடைய 5, 7, 9 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ம் வீடுகளின்மீது செலுத்தப் போகிறார் என்பதால், அந்த மூன்று இடங்களும் இக்காலத்தில் சிறப்படையப் போகின்றன. ஆம், குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே அதை இக்காலத்தில் அனுபவப்பூர்வமாக உணரப் போகிறீர்கள்.

முதலில் தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமாகிய, தன, குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கப் போகிறார். இந்த இடத்தை வாக்கு ஸ்தானம், நேத்திர ஸ்தானம் என்றும் சொல்லலாம். இதனால் உங்கள் மனதில் இருந்த சங்கடங்கள் எல்லாம் இனி அகலும். உடலில் இருந்த சங்கடம் விலகி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விலகிச்சென்ற குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் உங்களிடம் வருவார்கள். வருவாய் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாவதுடன் இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் அகலும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். கல்வியாளர்களுக்கு இக்காலத்தில் மேன்மை உண்டாகும். ஆசிரியர்கள் தங்கள் மீதிருந்த வம்பு வழக்குகள் தீர்ந்து நல்ல நிலைக்கு வருவார்கள். திருமண வயதினருக்கு திருமணம் கூடிவரும். துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும்.

அடுத்து, தனது ஏழாம் பார்வையை உங்கள் ராசிக்கு நான்காம் இடமான, மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், வாகன ஸ்தானத்தின் மீது செலுத்தும் குரு பகவான், உங்கள் மனதில் இருந்த குழப்பங்களை அகற்றி உங்களுக்கு நல்வழிகளை காட்டப்போகிறார். உறக்கமின்றி, ஓய்வின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான நிலையை வழங்கப்போகிறார். வாழ்க்கைத்துணையின் வழியே சுகத்தையும் சந்தோஷத்தையும் காணும் நிலையினை உருவாக்கப்போகிறார். தாயாரின் உடல் நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றி முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறார். தாய்வழி உறவினர்களின் ஆதரவு இனி உங்களுக்கு அதிகரிக்கும். கல்வியில் மேன்மையுண்டாகும். புதையல் கிடைத்ததுபோல் ஒரு சிலருக்கு திடீர் யோகம் உண்டாகும் புதிய வாகனம் வாங்கி மகிழ்வதுடன் அசையா சொத்துகளையும் வாங்குவீர்கள். இக்காலத்தில் குலதெய்வ அருளும் உங்களுக்குண்டாகும்.

அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையை உங்கள் ராசிக்கு ஆறாம் இடமாகிய ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தின் மீது செலுத்தும் குரு பகவான், உங்கள் உடலில் தீராமல் இருந்த நோய்களை இப்போது தீர்த்து வைப்பார். போட்டியாளர்கள், விரோதிகளால் உண்டான கெடுதல்களையும், தொல்லைகளையும் விரட்டியடித்து உங்கள் வாழ்வில் நிம்மதியை உண்டாக்குவார். எதிர்பாலினரால் ஏற்பட்ட அவதியை நீக்கி உங்கள் மனதில் இருந்த இனம் புரியாத பயத்தை அகற்றி தெளிவையும் துணிவையும் வழங்கோவில். இழுபறியாக இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலையினை ஏற்படுத்துவார். இவை யாவும் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்களுக்கு உண்டாகும் ஸ்தானப் பலனும், பார்வைகளின் பலன்களுமாகும்.

பாதக பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சங்கடங்கள் தோன்றும், சாதகமான நிலை இல்லாமல் போகும் என்ற நிலையில், 3.5.2024 முதல் 2.6.2024 வரை அவர் அஸ்தங்கம் அடைவதால், இக்காலத்தில் அவரால் ஏற்படக்கூடிய பாதக பலன்கள் முடக்கமாகும். சங்கடங்கள் ஏற்படாமல் போகும். உங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் திசா புத்திகளுக்கேற்ற பலன்கள் இக்காலத்தில் நடைபெறும்.

வக்ர காலம் உங்களுக்கு வசந்த காலம்
குரு பகவானின் சஞ்சார நிலையில், அஸ்தமனமும் வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலங்களில் அவர் வழங்கும் பலன்களிலும் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை குரு வக்ரம் அடைவதால், ஜீவன ஸ்தானத்திலிருந்து அவர் வழங்கிவரும் பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்ரம் அடையும்போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால், இக்காலத்தில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். நன்மைகள் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். தெய்வ அனுகூலம் உண்டாகும். பெரியோரின் ஆதரவு ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வரவு அதிகரிக்கும். தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். தடைப்பட்ட முயற்சிகள் எல்லாம் நடந்தேறும். இக்காலம் உங்களுக்கு ஆதாய காலமாகவே இருக்கும்.

சங்கடம் தரும் சப்தம சனி
ரிஷப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், சனி பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால், அந்நியோன்யமாக இருந்த நண்பர்களும் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். புதிய நபர்களின் தலையீட்டால் குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் உருவாகும். கூட்டுத்தொழிலில் தடைகள், பிரச்சினைகள் என்று ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்க வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். எதிர்பாலினரால் தடுமாற்றம் தடம் மாற்றம் என்றும் சிலருக்கு ஏற்படும்.

ராகு – கேது சஞ்சாரப் பலன்கள்
குருபகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், ராகு அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால், எடுக்கும் காரியங்களில் எதிர்மறையான பலன்களே ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உருவாகும். நெருங்கிய உறவினர்களும் பகைவராக மாறுவார்கள். ஒரு சிலர் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உண்டாகும். தொழிலில் தேக்கமும் அதனால் வருமானத்தில் தடையும் ஏற்படும். வண்டி வாகனங்களால் விபத்துகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் போராட்டம் மிகுந்திருக்கும். நிம்மதியற்ற நிலையில் வாழ வேண்டியதாக இருக்கும். ஒழுக்கக் குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு மறைமுக நோய்கள் தோன்றி வெளியில் சொல்ல முடியாமல் வதைபட வேண்டியதாக இருக்கும். இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் கேது பகவானால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உருவாகும். பிரிவும் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் எல்லாம் ஏமாற்றமே ஏற்படும் பணக்கஷ்டம் உண்டாகும். அதனால் கடன் வாங்கி அவதிப்படவும் நேரும். கல்வியில் தடை ஏற்படும்.செல்வ சுபிட்சம் குறைய ஆரம்பிக்கும். உங்கள் பேச்சு மற்றவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவதாக இருக்கும். என்பதை இக்காலத்தில் மனதில் கொண்டு உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு செயல்படுவது நன்மையாகும்.

சூரியனால் உண்டாகும் ராஜ யோகம்
ஒவ்வொரு கிரகமும் அவரவர் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப பலன்களை வழங்குவது போல், உங்கள் ராசி நாதனான சூரிய பகவானும் உங்கள் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு அதிர்ஷ்டமான, யோகமான பலன்களை வழங்குவார். அக்காலங்களில் உங்களுக்கு எல்லா விதத்திலும் நன்மைகள் ஏற்படும். அந்த ரீதியில் உங்களுக்கு, வைகாசி, ஆனி, ஐப்பசி, தை ஆகிய நான்கு மாதங்களிலும் மற்ற கிரகங்களால் உங்களுக்கு ஏற்பட்டு வரும் சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். உங்களை முழுமையாக பாதுகாப்பார். சூரியன் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்கள் நிலையை உயர்த்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்குவார், எதிர்ப்பும் எதிரிகளும் இல்லாத நிலையை உருவாக்குவார். உடல் நிலையில் இருந்த சங்கடங்களை நீக்குவார். வேலைத்தேடி வருபவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பினை வழங்குவார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களிலும் இக்காலத்தில் லாபத்தை அதிகரிப்பார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகளை கிடைக்கச் செய்வார். வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நிறைவேற்றி வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். சொத்து சேர்க்கையை அதிகரிப்பார்.

பொதுப் பலன்
குரு பகவான் பத்தாம் இடத்திற்கு வரும்போது பதவி பறிபோகும் என்றாலும், உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதி அவரே என்பதால் இக்காலத்தில் உங்கள் நிலையில் குரு பகவான் முன்னேற்றத்தையே வழங்குவார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை வழங்குவார். ஊதியம் உயரும். சலுகைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். சொந்த இடம், வீடு வாங்கும் யோகம் ஏற்படும். தம்பதியரிடையே சங்கடங்கள் ஏற்பட்டாலும் அது சரியாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் விருத்தியாகும். விவசாயம் மூலம் வருவாய் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். இரண்டாமிட கேதுவை குரு பார்ப்பதும், நான்காமிடத்தின் மீது சனியின் பார்வை உள்ள நிலையில் அந்த இடத்தையும் குரு பார்ப்பதால் பணவரவு, குடும்பநிலை, கல்வி, ஆரோக்கியம், சந்தோஷம் சுகம் என்பதில் நன்மைகள் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலிலும், பார்த்துவரும் உத்தியோகத்திலும் இக்காலத்தில் கூடுதலாக கவனம் செலுத்தினால் யாவும் நன்மையாகும்.

பரிகாரம்
உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் ஆலங்குடிக்கு சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதுடன், காளஹஸ்திக்கு ஒருமுறை சென்று ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்து வருவதால் நன்மைகள் அதிகரிக்கும்

ShareTweetSendShare

Related Posts

இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

June 13, 2025
Thug Life Roast
சினிமா

கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

June 13, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை பொளந்து கட்டிய இஸ்ரேல்! அதிகாலையில் சரமாரி அட்டாக்..கதிகலங்கிய ஈரான்!

June 13, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
செய்திகள்

🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்

June 12, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

மத்திய பிரதேசத்தில் விரைவில் பிஜேபி ஆட்சி- அமித்ஷா மாஸ்டர் பிளான்

March 5, 2020
கொட்டும் பனியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை தூக்கி வந்த ராணுவ வீரர்கள்.

கொட்டும் பனியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை தூக்கி வந்த ராணுவ வீரர்கள்.

January 9, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

December 6, 2023
நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே நீட் தேர்விலிருந்து விலக்கு  பெற வேண்டியதும்,  தி.மு.க அரசின் கடமை!  அன்பு மணி ராமதாஸ்.

நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், தி.மு.க அரசின் கடமை! அன்பு மணி ராமதாஸ்.

June 30, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?
  • கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!
  • விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!
  • ஈரானின் அணுசக்தி நிலையங்களை பொளந்து கட்டிய இஸ்ரேல்! அதிகாலையில் சரமாரி அட்டாக்..கதிகலங்கிய ஈரான்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x