ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் 3ம் உலகப்போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் மட்டுமன்றி உலக அரசியலில் தற்போது பல்வேறு விதமான ராணுவ மோதல்கள் நடந்து வருகின்றன.உலக அளவில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல், ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் புதிய உச்சத்தை, புதிய பரிமாணத்தை அடைந்து உள்ளன. இந்த மோதல்கள் காரணமாக ஏற்கனவே 3ம் உலகப்போர் தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லைமத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதலைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது தாக்குதலை நடத்தியது. இதை அடுத்து, டெஹ்ரான் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இஸ்ரேல் தலை நகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஈரான் அணு மற்றும் இராணுவ தளங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவம் இஸ்பஹானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
ஈரானின் ஃபோர்டோவ் அணு உலை அருகே இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் தாக்கியபோது,டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் கடுமையான வெடிச்சத்தங்கள் கேட்டன.இதெல்லாம் பார்க்கும் போது உலக அளவில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல், ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் புதிய உச்சத்தை, புதிய பரிமாணத்தை அடைந்து உள்ளன. இந்த மோதல்கள் காரணமாக ஏற்கனவே 3ம் உலகப்போர் தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த போரில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டு உள்ளது.
அதுவும் இது சாதாரண போர் அல்ல.. அணு ஆயுத போராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த போரில் நேரடியாகவும்.. மறைமுகமாகவும் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், சிரியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் பங்கெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மேலேயும் இஸ்ரேல் “எழும் சிங்க நடவடிக்கை” அதாவது “Operation Rising Lion” என பெரும் தாக்குதலை ஈரான் மேல் தொடுத்துள்ளது இஸ்ரேல். இன்னும் சில வாரங்களில் ஈரான் அணுகுண்டை பெற்றுவிடும் அது தனக்கு பேராபத்து என உணர்ந்து தாக்குகின்றது என்றொரு செய்தியும் இது நீண்டகால திட்டம் டிரம்பரின் அனுமதியுடன் இப்போது நொறுக்குகின்றது எனும் செய்தியும் பரவுகின்றன
ஈரானின் உயர் ராணுவதளபதி இன்னும் முக்கிய அணுவிஞ்ஞானிகள் கொல்லபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, என்ன வகை விமானம் பயன்பட்டது, எந்த ஏவுகனைகள் பாய்ச்சபட்டன எனும் விவரம் வெளியிடபடவில்லைஇந்த தாக்குதலால் ஈரானிடம் தகுந்த வான்பாதுகாப்பு சாதனம் இல்லை என்பது தெரிகின்றது, இது இன்னும் இஸ்ரேலுக்கு சாதகமாகலாம்இஸ்ரேல் சூட்டியிருக்கும் பெயர்தான் வில்லங்கம் “சிங்கம்” என்பதுஅவர்கள் மரபில் அதாவது யூத மரபில் மிக மிக முக்கியமான ஒன்று, முழு பலத்தோடு பாய்கின்றோம் என்பது பொருள்
அதன் அர்த்தம் இஸ்ரேலின் முப்படையும் முழு சக்தியும் திரட்டி எதிரியினை ஒழிக்காமல் விடமாட்டோம் என்பது, இதனால் இது சாதாரணமாக முடியாது, மிகபெரிய அளவில் வெடித்து, ரானின் ஸ்திரதன்மை ஆட்சிமாற்றம் வரை இனி சாத்தியமாகலாம்