பிரிட்டனில் அதிகரித்த இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு! நான்கே மாதத்தில் 300% அதிகரிப்பு..

britain islamic

britain islamic

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது இதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தற்போது மிகப்பெரிய வெறுப்பு பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக பிரிட்டனில், இந்த போர் தொடங்கிய பின்னர் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குற்றங்கள் 300 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கான போர் தற்போது வரை நடந்து வருகிறது. மேலும் ஹாமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் கைவிடுவதாக இல்லை. உயிரிழப்புகள் ஒருபுறம் கவலையை ஏற்படுத்தினாலும், அதை தாண்டி மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. இது மேலும் மோசமான விளைவுகளை சந்திக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு இதனை கண்டறிந்து ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இந்த முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து பிரிட்டனில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குற்றங்கள் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பிரிட்டனில், கடந்த 2011ம் ஆண்டு முதல் வெறுப்பு குற்றங்களை டெல்மாமா (TELLMAMA) எனும் அமைப்பு பதிவு செய்து வருகிறது. அதாவது, கருப்பின மக்கள் மீதான வெறுப்பு, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, ஏழைகள், பெண்கள் மீதான வெறுப்பினால் ஏற்படும் குற்றங்களை இந்த அமைப்பு பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பின் இயக்குநர் இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரிட்டனில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குற்றங்கள் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியிலிருந்துதான் இந்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுள்ளார். இந்த 4 மாத காலத்தில் பிரிட்டனில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சுமார் 2000 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இவை முந்தைய ஆண்டை விட 335% அதிகம் என்றும் கூறியுள்ளார்.

2000 குற்ற சம்பவங்களில், இஸ்லாமியர்களுக்கு எதிராக 77 மிரட்டல்கள், 83 தாக்குதல்கள், 79 நாசவேலைச் செயல்கள், 69 பாகுபாடுகள், 39 வெறுப்புப் பேச்சுகள், மற்றும் 19 முஸ்லிம் எதிர்ப்பு இலக்கியத்தின் எடுத்துக்காட்டுகள் உட்பட 535 முறைகேடான சம்பவங்களை ‘மாமா’ ஆவணப்படுத்தியுள்ளது. இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவெனில், இதில் பாதிக்கப்பட்டவர்களில் 65% பேர் பெண்கள் என்பதுதான்.

Exit mobile version