வீதில போற ஓநாய வேட்டிக்குள்ள இழுத்து விட்ட திமுக
இரு நாட்களுக்கு முன் நடிகர் விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் தூக்கி சென்று விசாரணை நடத்தினர். ரஜினி அரசியல் வருவது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. இதனால் பீதியடைந்த திமுக நடிகர் விஜய்க்கு ஆதரவு கொடுத்தது . பாராளுமன்றத்தில் அக்கட்சி எம்.பிக்கள் விஜய்க்கு ஆதரவாக பேசி விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெறும் நிலையில், திமுக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல், டுவிட்டரில் ‘தி.மு.க. தலைவர் விஜய்’ என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.
தி.மு.க.கட்சியின் தலைவர் பதவி, சுமார், 50 ஆண்டுகளாக, கருணாநிதியிடமும் அவரது வாரிசு மு.க.ஸ்டாலினிடமும் உள்ளது. தலைவராக இருக்கும், ஸ்டாலினால் முதல்வராக முடியவில்லை. இதற்காக ஸ்டாலின் தற்போதே உதயநிதி ஸ்டாலினை களம் இறக்கிவிட்டார்.
அது பல திமுகவின் சீனியர்களுக்கு பிடிக்கவில்லை. ஸ்டாலினிடம் பேச வேண்டுமானால் அதற்கு முன் உதயநிதியை பார்க்க வேண்டும் என்ற கட்டளை இட்டுள்ளது திமுக தலைமை. இதனால் பல சீனியர்கள் அறிவாலயம் செல்வதை நிறுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கட்சி தொண்டர்களை நம்பாமல் பிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்தார் ஸ்டாலின்.இதுவும் திமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை செலவு செய்து கூட்டம் நடத்துவது நாங்கள் பணமோ பிரசாந்த் கிசோருக்கா என முணுமுணுக்க தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், தி.மு.க விஜயை தூக்கி வைத்து ஆடிருப்பது மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது உடன்பிறப்புகளுக்கு. விஜயின் ரசிகர்களோ தி.மு.க வை காப்பாற்றவும், தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தவும் நடிகர் விஜய்யால் மட்டுமே முடியும். எனவும் அதனால், தி.மு.க., தலைவர் பதவியை விஜய்யிடம் தாருங்கள் நடிகர் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும்,திமுகவை கலாய்க்கும் விதமாக ஸ்டாலின் அவர்களே ‘கால்கடுக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் தேவையில்லை. தலைவர் பதவியை விஜய்யிடம் கொடுத்துவிட்டு, அவரை ஒரு முறை சுற்றுப்பயணம் செய்து வரச் சொன்னால் போதும், தி.மு.க., நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும்’ ஸ்டாலினை மட்டம் தட்டி வருகின்றார்கள்.
ஸ்டாலின் எடுத்த முடிவுகளில் விஜயை தூக்கி வச்சு பேசியதும் அவரை பாரளுமன்ற லெவலுக்கு கொண்டு போய் பேசியதும் சீனியர்களை கடுப்படைய செய்தது. இந்த நிலையில் இன்று தி.மு.க தலைவர் விஜய் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தது. இதை கண்ட உதயநிதி கோபமடைந்தார். ஆனால் சீனியர்களோ சந்தோஷத்தில் உள்ளனராம். வீதில போற ஓநாய வேட்டிக்குள்ள இழுத்து விட்ட மாதிரி கத்தி என திமுக உடன்பிறப்புகள் சிலாகித்து வருகின்றார்கள். இதில் முக்கியமானது விஜயின் ரசிகர்களுக்கு இன்னும் 18 வயது பூர்த்தி அடையாதவர்களே அதிகம்