கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகின்றது.
திருக்கோவிலூர், குன்னத்தூர், எடப்பாளையம், ஆவியூர், கொளப்பாக்கம், தேவயகரம், சந்தைப்பேட்டை, வடமருதூர், சுந்தரேசபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் மானாவரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மனம்பூண்டி, அரகண்டநல்லூர், தேவனூர், கடகனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருக்கோவிலூர் தென்பனையாற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
