சுயசார்பு பாரதம் #AatmaNirbharBharatPackage – நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கையிலிருந்து சில…
அறிக்கை நாளையும் தொடரும்.
இன்றைய அறிவிப்புகள் – புலம்பெயர் தொழிலாளர்கள் , சாலையோர விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள், சிறு விவசாயிகள் – ஆகியோருக்கானவை.
விவசாயிகளுக்கு இன்று 2 அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், மேலும் சில அறிவிப்புகள் வரும் நாட்களில் பகிரப்படும்.
1) இது வரை…
லாக்டௌன் அறிவிக்கப்பட்டவுடன்: ஏழைகளுக்கான கரிப் கல்யாண் யோஜனா திட்டம் வாயிலாக பல விஷயங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3 கோடி விவசாயிகளுக்கு இதுவரை ரூ 4 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது!
லாக்டௌன் அறிவிக்கப்பட்டவுடன்: கடந்த 2 மாதங்களில் விவசாயிகளுக்கு எளிதாக கடன் பெறும் வகையில் 25 லட்சம் கிசான் கிரெடிட் அட்டைகள் (kisan credit cards) வழங்கப்பட்டுள்ளன. இது வரை அதன் மூலம் ரூ 25 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர்.
மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை: ரூ 86 ஆயிரம் கோடி கடனை 63 லட்சம் பேர் பெற்றிருக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள்: லாக்டௌன் அறிவிக்கப்பட்டவுடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இருப்பிடம் மற்றும் உணவுக்காக ரூ 11 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது.
சொந்த மாநிலம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை MGNREGA திட்டத்தின் கீழ் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களுக்கு பல சீர்திருத்தங்கள் கொண்டுவரவிருக்கிறது அரசு (annual health check up, appointment letters, minimum wages, re-skilling of retrenched workers…).
2) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இன்று முதல்…
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். (மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி / கோதுமை+++ ). 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இதனால் பயனடைவார்கள். செலவு ரூ 3,500 கோடி.
புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை (ONE NATION, ONE RATION CARD) மார்ச் 2021இல் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் 36 கோடி இந்தியர்கள் பலனடைவர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் பயனடையும் வகையில் மலிவு வாடகை (affordable rental housing) வீடுகள் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டம் தனியார் – அரசு கூட்டு முயற்சியில் Public-private partnership (PPP) நிறைவேற்றப்படும்.
3) சாலையோர வியாபாரிகளுக்கு : 50 லட்சம் பேர் பயனடையும் வகையில் ரூ 50 ஆயிரம் கோடி கடன் வசதி. லாக்டௌன் முடிந்ததும் அவர்களுக்கு இந்த உதவி கிடைக்கும்.
4) நடுத்தர வருமான பிரிவை சேர்ந்தவர்களுக்கு (குடும்பத்தின் வருட வருமானம் ரூ 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை உள்ளவர்கள்) மலிவு விலை வீடுகள். 2017இல் ஆரம்பித்த இத்திட்டத்தில் இது வரை 3.3 லட்சம் குடும்பங்கள் பயனடைந்தன. இது நீட்டிக்கப்பட்டு இன்னும் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு பயனடைய செய்ய திட்டம்.
5) விவசாயிகளுக்கு – ஏற்கனவே NABARD மூலம் வழங்கப்படும் முதலீட்டு உதவியோடு ரூ 30 ஆயிரம் கோடி வழங்கப்படும். 3 கோடி விவசாயிகள் இதனால் பயனடைவர்.
6) இரண்டரை கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்போருக்காக – ரூ 2 லட்சம் கோடி சலுகை கடன் (concessional credit).
Finance Minister announces short term and long-term measures for supporting the poor, including migrants, farmers, tiny businesses and street vendors