தமிழகத்தில் தொடர்ந்து திமுக மற்றும் திக கட்சிகளை சேந்தவர்கள் பிரதமர் மற்றும் பாஜகவினரை அவதூறாக சமூகவலைத்தளங்களில் விமரிசித்து வருகிறார்கள். இது குறித்து தமிழக காவல்துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து பாஜக டெல்லியில் புகாரினை தந்துள்ளது.
கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் முதல்வர் ஸ்டாலினை பற்றி தவறாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி கல்யாணராமனை இரவோடு இரவாக கைது செய்தது தமிழக காவல்துறை.மேலும் அவர் மீது குண்டாஸ் போடப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். கால்யாணராமனை கைது செய்யும் அங்கு அங்கு வந்த பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷை காவல்துறையினர் தகாத வார்த்தையினாலும் அடிக்க பாய்ந்துள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மேலும் பா.ஜ.க செயலாளர் சுமதி வெங்கடேஷ் காவல்துறை ஆணையிரிடம் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பாஜக கலை பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் மற்றும் பாஜக பெண் தலைவர்ககளை மிகவும் கீழ்த்தரமாக சமூக வலகலைத்தளங்களில் தி.மு.க சமூகவலைதள பொறுப்பாளர் ஜெயச்சந்திரன பதிவிட்டார். தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் கொடுத்துள்ளார்.இது குறித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
பா.ஜ.க பெண் தலைவர்களை தொடந்து அவதூறு செய்து வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது தொடந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்த்துறையின் ஒரு சார்பு போக்கு குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ரேகா ஷர்மா அவர்களிடம் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ்,மற்றும் காயத்ரி ரகுராம், பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி சூர்யா ஆகியோர் இன்று புகார் அளித்துள்ளார்கள்.
நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா உத்திரவாதம் அளித்துள்ளார்கள். டெல்லியில் பிரம்பை எடுத்தால் தான் இங்கு தமிழகத்தில் தி.மு.க அரசில் சில நியாயமான விஷயங்களும் நகரும் போல. இனி டெல்லியில் இருந்து நேரிடையாக தமிழக காவல்துறைக்கு உத்தரவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுகவை ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம் என சூளரை கொண்டுள்ளது தமிழக பாஜக.