கடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.

கோவிட்19 வைரஸ் நோயால் பல்லாயிரம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டின் உள்ளேயே அடங்கிக்கிடக்கின்றனர்.

இந்த சூழலில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் இந்தியாவில் பல இடங்களில் நடந்து வருகின்றன.

குரானா வைரசை மக்களிடம் பரப்புவதற்காக, தெருவில் பழம் விற்கும் வியாபாரி, பழத்தின் மீது எச்சில் துப்பி வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ரூபாய் நோட்டில் எச்சில் துப்பி, பறக்காமல் இருப்பதற்காக தெருவில் கல் வைத்து மக்களை வைரஸ் பாதிக்கச் செய்யும் முயற்சி நடைபெற்றது. காவல்துறை வந்து கவனமாக நோட்டுக்களை அப்புறப்படுத்திய வீடியோ மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது.

இந்த சூழ்நிலையில் மக்கள் யாரிடம் வணிகம் செய்வது என்பதில் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

மக்கள் அச்சத்தைப் போக்குவதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் ஒருசில வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும் “விஸ்வ ஹிந்து பரிஷத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடை” என்ற பிளக்ஸ் பேனரையும் வியாபாரிகளுக்கு அளித்தது.

பல வியாபாரிகள் இந்த பேனரை கடையில் தொங்கவிட்டு வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

வியாபாரம் மதரீதியாக நடக்கக்கூடாது என்று கூறி மாநில அரசு இந்த கடைக்காரரை கைது செய்தது.

மதரீதியாக வியாபாரம் நடக்க கூடாது என்று மாநில அரசு நினைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் இது இந்து மதத்துக்கு மட்டுமே பொருந்துமா? அல்லது எல்லா மதத்திற்கும் இந்த சட்டம் பொருந்துமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பல கடைகளில் “ஹலால்” என்று எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். ஹலால் என்பது முழுக்க முழுக்க மத ரீதியான, இஸ்லாமிய மதத்தை குறிக்கும் சொல்லாகும். ஹலால் வர்த்தகம் மலேசியாவை தலைமையகமாக கொண்டு நடத்தப்படுகிறது. சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு (21 லட்சம் கோடி ரூபாய்கள்) ஹலால் வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹலால் வர்த்தகத்தில் வெறும் உணவுப் பொருட்கள் மட்டும் இல்லை. இக்காலத்தில் ஹலால் ஆடைகள், ஹலால் மால்கள், ஹலால் அழகு சாதனங்கள் என்று அனைத்து பொருட்களிலும் ஹலால் வர்த்தகம் நுழைந்துவிட்டது.

ஒரு பொருள் ஹலால் முறையில் செய்யப்பட்டது என்பதை அறிவிக்க சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக அந்த பொருளின் உற்பத்தியை கண்காணிக்க ஒரு ஹலால் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுகிறார். இந்த வழிமுறைகள் அனைத்திலுமே இஸ்லாமியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

ஆக ஹலால் வணிகம் என்பது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் வணிகம் ஆகும்.

ஹிந்து வணிகம் என்று பெயரிடப்பட்ட பேனர் வைக்க தடை என்றால், ஹலால் என்ற பெயர் வைக்க தடை வரவேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியா மதசார்பற்ற நாடு. எல்லா மதத்தையும் சரிசமமாக பார்க்கவேண்டும். சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து பொது மக்களின் விருப்பமாக உள்ளது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்.

Exit mobile version