இந்துக்களின் எழுச்சியை கண்டு ஆடிப்போன ஸ்டாலின் குடும்பம்…!

இதுநாள் வரை திமுக இந்துக்களை ஏமாற்றி வாங்கிவந்த ஓட்டுக்களை தற்பொழுது வாங்க முடியாத சூழ்நிலை தமிழகத்தில்புதிய காலம் பிறந்துள்ளது. சமீப காலமாக இந்துக்களிடையே ஒற்றுமை  அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்பது உண்மை.

தமிழ் கடவுள் முருகபெருமானை இழிவுப்படுத்திய திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை கண்டு திமுகவே அறிக்கை வெளியிடும் நிலைக்கு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதோடு மட்டுமில்லாமல் இந்து அமைப்புகளால் நடத்தப்பட்ட வேல் பூஜை தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

இந்துக்களின் ஓட்டு வங்கி உருவாகும் நிலை தற்பொழுது வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் திமுக பஜனை பாடும் என்று பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியது தற்பொழுது நடக்க துவங்கியுள்ளதை உணர முடிகிறது. இதன் தொடர்ச்சியாக, கருணாநிதி குடும்பத்தின் வாரிசு உதயநிதி, தனது டுவிட்டர் பக்கத்தில். விநாயக பெருமானின் சிலை இருக்கும், புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதன் மூலம். இந்துக்களின் பலத்தை திமுக தற்பொழுது உணர துவங்கியுள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version