மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது.இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி அருள்மிகு மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திருக்கல்யாணம் அன்னியர் படையெடுப்பினால் 1330 ஆம் ஆண்டு முதல் 1378 ஆம் ஆண்டு வரை 48 ஆண்டுகள் நடைபெறவில்லை.
1378 ஆம் ஆண்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்கு வந்த பின் கோயில் சீரமைக்கப்பட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டது.
அன்றிலிருந்து கடந்த வருடம் 2019 சித்திரை திருவிழா வரை திருக்கல்யாண வைபோகம் தொடர்ந்து நடந்து வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத் கப்பட்டுள்ளதால்இந்த ஆண்டு திருக்கல்யாணம் கடந்த 04.05.20 திங்கட்கிழமை எளிமையாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது.
இந்நிலையில் அம்மன் திருக்கல்யாணத்தினை கொச்சைப்படுத்தியும், இந்துக்களின் நம்பிக்கைகளை கேலி செய்தும் முக நூலில் சிலர் பதிவிட்டிருந்தனர்.
அவ்வாறு இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் முகநூல் பதிவு வெளியிட்ட Shahul Hameed, Anto leony, Kaleem Mohamed, Manoharan, Tpdk Prabhakaran ஆகியோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு இன்று 06.05.20 on-line மூலம் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது.
கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்,
மாநில செயலாளர் .
இந்து மக்கள் கட்சி .