தீவிரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மலேசியா வலுவான ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துரைக்க எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு மலேசியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தது.
அப்போது தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, வன்முறைக்கு எதிரான மலேசியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அப்போது அவர் “இந்தியா போரில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக அதன் பொருளாதாரப் பாதை மீதே கவனம் செலுத்துகிறது. தீவிரவாதத்தை கைவிடவும் மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடவும் பாகிஸ்தானை மலேசியா போன்ற நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் சஞ்சய் ஜா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவின் 10 நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு மலேசிய அரசாங்க அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தூதரகம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. “நாங்கள் ஒரு இஸ்லாமிய நாடு, நீங்களும் ஒரு இஸ்லாமிய நாடு… இந்தியக் குழுவின் பேச்சைக் கேட்காதீர்கள்” என்று பாகிஸ்தான் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை மலேசியா ஏற்றுக்கொள்ளவில்லை.
மலேசியாவின் மறுப்பு
ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினை நிலுவையில் உள்ளதால், பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்தது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான இந்தியக் குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மலேசியா அனுமதி அளித்து உள்ளது.
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த மலேசிய அரசு, இந்தியக் குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளித்தது. ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் அபிஷேக் பானர்ஜி மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹரி அப்துலைச் சந்தித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்
இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு மலேசியாவுக்குச் இந்தியாவின் குழு சென்றுள்ளது. இந்தியக் குழு கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் சென்றடைந்தது.
முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒய்.பி. சிம் ட்ஸ் ஜிங் தலைமையிலான மலேசிய மக்கள் நீதிக் கட்சியை (PKR) இந்தியக் குழு சந்தித்தது.பாகிஸ்தான் தூதரகம் மலேசிய அரசாங்க அதிகாரிகளிடம், “நாங்கள் ஒரு இஸ்லாமிய நாடு, நீங்களும் ஒரு இஸ்லாமிய நாடு… இந்தியக் குழுவின் பேச்சைக் கேட்காதீர்கள், மலேசியாவில் இந்தியா மேற்கொள்ள உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுங்கள்” என்று கூறியது.
ஆனால் சஞ்சய் ஜா தலைமையிலான இந்தியக் குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்தது. மலேசியாவின் இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்தியா அனுப்பிய குழு
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா தனது அரசியல் தலைவர்கள் குழுவை அனுப்பி உள்ளது.
இந்திய வரலாறு தெரிந்தவர்கள், நன்றாக பேச கூடிய தலைவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் பிரதமர் மோடியால் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் ஒன்பது பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குகிறார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே எகிப்து, கத்தார், எத்தியோப்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு தலைமை தாங்குகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தரூர், கனிமொழி, சஞ்சய் ஜா மற்றும் சுப்ரியா சுலே மற்றும் ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் ஜெய் பாண்டா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் இந்த குழுக்களில் இடம்பிடித்துள்ளனர்.
சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியாவிற்கான குழுவிற்கு பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமை தாங்குவார். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் எட்டு பேர் கொண்ட குழுவிற்கு ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்குகிறார்.இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான குழுவிற்கு ஜேடியு நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா பொறுப்பேற்பார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கான ராஜதந்திர தொடர்புகளுக்கு ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமை தாங்குகிறார்.