குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது-தமிழக அரசுக்கு வலுக்கும்கோரிக்கை.

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் – 15 அன்று மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த தினத்தன்று தமிழக அரசால் சில கரணங்களை மையமாக வைத்து சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.


சூழ்நிலை காரணமாக தவறு செய்து தண்டனை பெற்றவர்களை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்வதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள் இந்த சலுகையை பயன்படுத்தி விடுதலையாக துடிக்கின்றனர்.

அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அது மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கும். மீண்டும் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும், மதக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்படும். தமிழ்நாடு தாலிபான் நாடாக மாறிவிடும்.

தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டு வெடிப்பு குற்ற கைதிகள் விடுதலை செய்யபபடு்வது தவறான முடிவாகிவிடும்.


சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலுள்ள முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


சிறையில் உள்ள பயங்கர வாதிகளை தியாகிகளை போல சித்தரித்து விடுதலை செய்யக் கோரும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்.


எந்த அடிப்டையிலும் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது.

கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்,
மாநில செயலாளர்,
இந்து மக்கள் கட்சி .

Exit mobile version