முத்தமிழ் முருகன் மாநாடு எந்தவித ஊழலும் இல்லாமல் கோயில்களின் இருப்பு நிதியை செலவழிக்காமல் ஆன்மீக மாநாடாக நடந்தால் நல்லது.
ஆனால் இந்த மாநாடு சம்பந்தமாக வருகின்ற விளம்பரங்கள் அறிக்கையை பார்க்கும் போது சில சந்தேகங்கள் ஏற்படுகிறது.
முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுவது தமிழக அரசின் நிதியிலா ? ஆலயங்களின் இருப்பு நிதியிலா?
முருகன் புகழை பரப்பியவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதா ?
அல்லது திமுக புகழ் பாடும் அடிமைகளுக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதா?
அனுதினமும் ஆறுமுகனை வணங்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறதா? அல்லது கருப்பர் கூட்டத்தினை போன்று கடவுளை நிந்திக்கும் கருங்காலிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறதா?
இது ஆன்மீகத்தை வளர்க்க செய்யும் மாநாடா? அல்லது ஆன்மீகத்தை இழிவுபடுத்தி வரும் திமுகவிற்கு மறுமலர்ச்சி மாநாடா?
என்ற பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இந்த சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இந்த மாநாடு சம்பந்தமாக இந்துமுன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளிடம் கலந்து பேசி முடிவு செய்து அனைத்தும் வெளிப்படை தன்மையாக நடத்த வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது…