திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புக்கள் நடத்திய பேரணியின் பொது பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, தாராபுரத்தில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்து முன்னணி இயக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வணிக நிறுவனங்கள், கடை வீதிகள் மக்கள்நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தை அடுத்து இந்து முன்னணி இயக்கம் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது அதில் இந்து முன்னணி சார்பில் மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசிய வீடியோ
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















