தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் “சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பிரச்சாரம் செய்தார்.
‘டெங்கு, மலேரியா, கரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக் கூடாது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்
மேலும் முதல்வர் ஸ்டாலினும் திமுகவின் ஆட்சியைப் பற்றிக மேடைகளில் பேசும்போதெல்லாம் திராவிட மாடல் அரசு சனாதனத்தை எதிர்க்கும் அரசு என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில் திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சாக்கோட்டை அன்பழகன்.இந்து மக்கள் கட்சி நடத்திய சனாதான பொங்கல் விழாவில் கலந்துகொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் வள்ளுவர் புகைப்படத்துடன், ‘சனாதானத்தை போற்றும் பொங்கல் விழா’ என்று அச்சிட்டு பேனர் வடிவமைத்திருந்த அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் இந்து மக்கள் கட்சியினருடன் சாக்கோட்டை அன்பழகன் கைகோர்த்துள்ளது திமுகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக சாக்கோட்டை அன்பழகன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக திமுகவினர் கூறிவருகிறார்கள். மேலும் கட்சி தலைமை மீது சாக்கோட்டை அன்பழகனுக்கு கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவில் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி மாவட்டச் செயலாளார் ஆனவர் சாக்கோட்டை அன்பழகன். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தவர். 2011ஆம் ஆண்டு திமுகவுக்கு தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்ப்பு நிலவிய போதும் சாக்கோட்டை அன்பழகன் அதிமுகவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பு நழுவிச் சென்ற சமயத்திலும் கும்பகோணம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதனால் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் வெற்றி பெற்றார். திமுக ஆட்சி அமைத்து முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். ஹாட்ரிக் வெற்றி பதிவு செய்த சாக்கோட்டை அன்பழகனுக்கு ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அடுத்து நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திலும் சாக்கோட்டை அன்பழகனுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.
எனவே திமுக தலைமைக்கு தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் சாக்கோட்டை அன்பழகன் இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சொல்கிறார்கள்.இந்நிலையில் திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, சாக்கோட்டை அன்பழகன் திட்டம் என்ன என்பது குறித்த பேச்சுக்கள் திமுகவுக்குள் அதிகரித்துள்ளது. மேலும் திமுகவே மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கினாலே உறுப்பினரிலிருந்து நீக்கினால் எம்.எல்.ஏ பதவி போகாது . அதனால் தான் இந்த திட்டம் என்கிறார்கள்.
அப்படியே நீக்காமல் பாஜக பக்கம் வந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் அப்போது சாக்கோட்டை அன்பழகன் மீண்டும் நின்று வெற்றி பெறலாம் என கணக்கு போட்டுவைத்துள்ளார்
மேலும் பாஜக டெல்டா பகுதிகளில் காலூன்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை அன்பழகன் பா.ஜ.க பக்கம் வர தயாராக உள்ள காரணத்தால்தான் இந்து மக்கள் கட்சி நடத்திய சனாதான பொங்கல் விழாவில் கலந்துகொண்டுள்ளார். அதற்கான தூது தான் இது என்கிறார்கள்.