கோவில்களில் தமிழில் அர்ச்சனை – சர்ச்களிலும், மசூதிகளிலும், தமிழில் தான் பிராத்தனை செய்ய வேண்டுமென கூறாதது ஏன்? தேவநாதன் யாதவ் காட்டம்..!

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது இந்நிலையில் யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி நிர்வாக இயக்குனருமான தேவநாதன் யாதவ் அவர்கள் தி.மு.க அரசுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்துக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். இதேபோல் சர்ச்களிலும், மசூதிகளிலும் தமிழில்தான் பிராத்தனை செய்ய வேண்டுமென ஏன் அறிவிக்கவில்லை. அவர்கள் மட்டும் தமிழர்களில்லையா..? ஏன் இந்த ஓரவஞ்சனை..?

திமுக அரசு தற்பொழுது இந்து அறநிலையத்துறை என்பத்திருக்கு பதிலாக அறநிலையத்துறை என்று மட்டும் சொல்லிவரும் நிலையில் இந்துக்களுக்கு மட்டும் பாரபட்சமாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகா தெரிகிறன்றது.

தொடர்ந்து இதுபோல் செயல்பட்டு வரும் திமுக மீது இந்து மக்கள் மத்தியில் கோபம் அதிகரிக்க அதிக வாய்ப்பாக வருகின்றது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version