கிறிஸ்தவர்களுக்கு இந்து கோயில் நிலம் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் அட்டூழியம்.

கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் ஊத்தோடைக் காட்டில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக சர்வே என்.421ல் 19.54 ஏக்கரில் 5 ஏக்கர் நிலத்தினை ராஜீ கவுண்டர் என்பவர் கடந்த 1986 ஆம் ஆண்டு குத்தகை சட்டத்தின் படி பதிவு செய்து விவசாயம் செய்துவந்தார்.

அவரது இறப்பிற்கு பின் அவரது இளைய மகன் விஜயக்குமார் என்பவருக்கு வாரிசுதாரர் என்ற முறையில் நிரந்தர குத்தகைதாரராக பதிவு செய்யப்பட்டு விவசாயம் செய்து வந்தார் .

இவரை போலவே இன்னும் இரண்டு நபர்கள் தலா 4 ஏக்கர் நிரந்தர குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

விஜயகுமாருக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கிழங்கு பயிரிட்டுருந்தார். இந்நிலையில் 19.54 ஏக்கரில் மீதமுள்ள 6.54 ஏக்கருக்கு ஜூலை 2020 ல் பொது ஏலம் விடப்பட்டது. இந்த பொது ஏலத்தில் இந்து சமய அறநிலைத்துறை சட்டத்திற்கு புறம்பாக 4 ஏக்கர் நிலத்தினை கிருத்துவரான டேவிட் ராஜா என்பவருக்கு ஏலம் வழங்கினார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரா காலமாகவே இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர், அலுவலக பணியாளர் சின்னசாமி ஆகியோர் கிருத்துவரான டேவிட் ராஜ என்பவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு விஜயக்குமாரிடம் அவர் கிழங்கு பயிர் செய்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தினை வழங்கிடும்படி காவல் துறையின் உதவியுடன் மிரட்டினார்கள் அதற்கு விஜயகுமார் ஒப்புக் கொள்ளாத காரணத்தினால்.

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர், அலுவலக பணியாளர் சின்னசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் டேவிட்ராஜா மற்றும் 9 நபர்கள் கூட்டாக சேர்ந்து விஜயகுமார் 1.5 ஏக்கரில் பயிர் செய்து அறுவடைக்கு தயராக இருந்த கிழங்கு பயிரினை இரண்டு டிராக்டர் மூலம் கிழங்கு பயிரினை அழித்து நாசம் செய்துள்ளனர்.

இந்த படுபாதக செயலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கச்சிராயபாளையம் காவல் துறையினர், மேற்படி விவசாய பயிர் அழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்ட நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே காவல் துறையின் மோசமான செயலை கண்டித்து இன்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் பாரதிய கிசான் சங்கம் சார்பில் நடத்த முற்பட்ட போது விவசாயிகளை கைது செய்து கச்சிராயபாளையம் வாசவி மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதி கேட்ட விவசாயிகளை கைது செய்த காவல் துறை, குற்றவாளிகளை கைது செய்ய தயங்குவது ஏன்?

குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள தொடர்பு என்ன?

பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நீதி கிடைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா?

கட்டுரை :- வலதுசாரி சிந்தனை யாளர்கள் ராமு நடராஜன்

Exit mobile version