தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது.
மேலும் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த சம்பவம் இப்போது நடந்தது இல்லை சில வருடங்களுக்கு முன்பு நடந்தேறியுள்ளது. பாகிஸ்தான் ஏ.ஆர்.ஒய். டிவி யில் ஆப்கானில் வசிக்கும் இந்துக்கள் இனப்படுகொலைக்குக்கு ஆதரவாக விவாதம் நடந்துள்ளது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விவாதத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரமுகர் ஜயித் ஹமித் கூறியதாவது, ‛ ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என அல்லாவை பிரார்த்திக்கிறேன். இந்துக்கள் ஆப்கான் நாட்டில் நீண்ட நாட்களாக இனப்படுகொலைக்கு ஆளாக வில்லை. பல வருடங்களாக இந்துக்கள் ஆப்கானில் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, இந்துக்கள் தனித்து விடப்படும் போது அவர்களை படுகொலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்துக்கள் அடுத்து வரும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆப்கானை நினைத்து கூட பார்க்க வாய்ப்பில்லை’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த விவாதம் உலகில் வாழும் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கான் போன்ற நாட்டில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்து பெண்கள் கடத்தப்பட்டு முஸ்லீம்களுக்கு கட்டாய திருமணம் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2824625