இந்து முன்னணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில்,சுதந்திரம் கிடைத்தது இஸ்லாமியர்களாலா? இஸ்லாமியர்களிடம் இருந்தா?
வரலாறு படித்துள்ளாரா? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை!!
கடந்த ஏப்ரல் 18 அன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடைபெற்ற வஃக்ப் வாரிய சட்ட திருத்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது இஸ்லாமியர்களால் என்ற கருத்தில் பேசியுள்ளார்.
செல்வபெருந்தகை இந்திய வரலாறு படித்தாரா? மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு அவருக்கு தெரியுமா? என்ற சந்தேகம் எழுகிறது.
சுதந்திர பிரகடனம் வெளியிட்டு சுதந்திரத்திற்கு போராடிய மருது சகோதரர்கள், பூலித்தேவன் போன்றோரை காட்டி கொடுத்தது யார் என்பதை செல்வபெருந்தகை போன்றோர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்கள் இந்திய விடுதலைக்கு போராடினார்களா? அல்லது அகண்ட பாரதத்தை வெட்டி பிளந்து கிழக்கு & மேற்கு பாகிஸ்தான் உருவாக போராடினார்களா என்பதை மக்கள் மிக நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.
வரலாற்றை திரிக்கும் நயவஞ்சகத்தை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை என்பதையே செல்வபெருந்தகையின் இத்தகைய பேச்சு எடுத்துக் காட்டுகிறது.
வரலாறு அறியாத செல்வபெருந்தகை போன்றோரின் பொறுப்பற்ற பேச்சுகள், எண்ணற்ற தியாகிகளின் தியாகம் புறக்கணிப்படுகிறது, மீண்டும் ஒரு பிரிவினையை தூண்டுவதாகவும் உள்ளது கடும் கண்டனத்துகுரியது,
தேச பிரிவினையை முன்னெடுத்து அதற்கு ஆதரவளித்தது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். அதன் போராட்டத்தில் கலந்துகொண்டு வரலாற்றை திரித்து பேசுவது சுதந்திர போராட்டத்தை இழிவு செய்வதன்றி வேறில்லை.
ஆகவே இனியாவது செல்வபெருந்தகை போன்றோர் வரலாற்றில் இருந்து பாடம் கற்று இஸ்லாமிய மதவாத அரசியலை ஊக்கப்படுத்துவதில் உள்ள ஆபத்தை உணர வேண்டும் என குறிப்பிடபட்டுள்ளது.