இந்திய வரலாற்றில் முதல்முறையாக என்று சொல்வதை போல “சத்தமே இல்லாமல் இந்திய வரலாற்றில் முதல்முறையாக பல சாதனைகளை நமது மோடி தலைமையிலான அரசாங்கம் செய்துவருகிறது. அவை பெரும்பாலும் ஊடகங்களின் பார்வைக்கு வருவதில்லை, அதிலும் குறிப்பாக தமிழக ஊடகங்களின் பார்வைக்கு வருவதே இல்லை. தமிழகத்தில் பாஜகவின் பலம் சமூக ஊடங்கங்கள் தான். இதில் தான் பல செய்திகளை அறிந்து வருகிறத. தமிழக பாஜக சார்பில் ஆங்கில மற்றும் ஹிந்தி செய்திகளை தமிழில் மொழி பெயர்த்து வழங்கினால் போதும் மற்றவற்றை சமூக வலைதள பாஜக ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் பல புது முகங்களுக்கு வாய்ப்புகள் அளித்தார் மோடி. “தேசிய சமுகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டவர் பழங்குடியினத்தை சேர்ந்த பெண் “செல்வி. பிரதிமா பூமிக்.இவர் கடந்த 2019-நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிபுரா மேற்கு தொகுதியில் இருந்து பாஜக சார்பில் மக்களவை உறுப்பினராக வெற்றிப்பெற்றவர்.இவர் இந்திய வரலாற்றில் முதல்முறையாக திரிபுரா மாநிலத்தில் இருந்து தேர்வான முதல் மத்திய அமைச்சர் ஆவார்.இதற்கு முன்பு ஒருவர்கூட திரிபுரா மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சராக வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக தங்களது மாநில பிரதிநிதி ஒருவர் மத்திய அமைச்சர் ஆனதை அடுத்து திரிபுரா மாநிலமே திருவிழா கொண்டாட்டத்தை போல அம்மாநில மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு செல்வி.பிரதீமா பூமிக் அவர்கள் அகர்தலா நகரில் அளித்த பேட்டியில்…,
மாண்புமிகு பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிஜி அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் அபரிமிதமாக ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இது என் வாழ்வின் மிகப்பெரிய நாள். நமது தேசத்தை அதிக உயரத்துக்கு கொண்டுச்செல்லும் நமது பாரத பிரதமரின் முயற்சிக்கு தடையாக ஒரு சிறு கல்லை கூட விடமாட்டேன் என்று நான் உறுதியாக கூறுகிறேன் என்று தெரிவித்தார்….