நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு கடந்த 03/04/2020 அன்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
அந்த நிவாரண பொருட்களை பிரிப்பது தொடர்பாக முகமது ஆசாத் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் ரூபன் கான் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ரூபன் கான் என்பவரின் மனைவி கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் விலக்கிவிட்டு சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கே தங்கியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்களும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர் என்ற தகவல் உள்ளூர் காவல் துறைக்கு தெரிந்தது.
மேலும் விசாரணையில் முகமது ஆசாத் என்பவர் சென்னை கேளம்பாக்கம், படூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
அதே போல் ரூபல் கான் கூறுகையில் பூந்தமல்லி, குன்றத்தூர், படப்பை போன்ற இடங்களிலும் இவர்களை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த மேலும் பலர் சட்டவிரோதமாக குடிபுகுந்து தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் வங்காளதேசம் மற்றும் பர்மாவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர் என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.
அந்த ஆவணப்படத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நேரடியாகவே வழங்கியுள்ளோம், அதேபோன்று தமிழ்நாடு அரசுக்கும் அப்போதே அனுப்பி உள்ளோம்.
மேலும் நிவாரணப் பொருட்களை வழங்கிய தாம்பரம் யாகூப் என்பவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த மிக முக்கியம் காரணமாக இருந்தவர். இந்தத் தகவலையும் அதே ஆவணப்படத்தில் இந்து முன்னணி சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவை ஒருபுறமிருக்க தற்போதும் பிடிபட்டுள்ள இந்த சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்கள் மீதும் எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த இருதரப்பினரும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை தனித்தனியே பிரித்து வைத்துள்ளார்கள். இதேபோன்று சட்டவிரோதமாக நுழையும் வெளி நாட்டவர்களால் நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை அறிந்த இந்த அரசும், காவல் துறையும் ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை???
இதன் பின்னரும் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த செயல்களை கண்டும் காணாமல் அரசு இருக்கிறது?
தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதும், மாறாததும் நம் அரசின் கையிலும், காவல்துறை கையிலும் தான் உள்ளது. முகம்மது ஆசாத் மற்றும் ரூபன் கான் ஆகியோர் கூறிய தகவல்களை வைத்து சட்டவிரோதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நகல் : உயர்திரு தலைமை செயலாளர் அவர்கள்,
உயர்திரு தமிழக உள்துறை செயலாளர் அவர்கள்,
உயர்திரு தமிழக DGP அவர்கள்
கடிதம்:- V.P. ஜெயக்குமார் துணைத் தலைவர்