புது டில்லி காவல்துறையின் 73வது உயர்வு நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார் .
காவல்துறை சார்பாக நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, பின்னர் உரையாற்றினார்: அவர் உரையாற்றியவது: மதத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் அடிப்படையிலோ பனி செய்யமால் பாகுபாடு காட்டாமல் நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்கவே காவல்துறை செயல்பட்டு வருகிறது.
காவல்துறையினர் இங்கு யாருக்கும் எதிரி அல்ல. சமாதானத்தின் நண்பர்கள் காவல்துறையினர். இவர்கள், மதிக்கப்பட வேண்டியவர்கள், புது டில்லிக்கு செல்லும்போதெல்லாம், போலீஸ் நினைவு சின்னத்தை பார்வையிட்டு, தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த 35 ஆயிரம் போலீஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நமது நாட்டிற்காக காவலர்கள் தங்களது இன்னுயிரை தந்துள்ளனர் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல், அவர்களின் பணி எவ்வாறு என்பதை நாம் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தான் நமது காவல்துறை என்பதை பபுரிந்து கொள்ளுங்கள், என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
அதனாலேயே காவல்துறையை விமர்சிப்பது தவறான செயல் புது டில்லி போலீசை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் தான் தொடங்கினார் என்பது பெருமைக்குரிய விஷயம். இது இந்த துறைக்கே முழு உத்வேகம் அளிக்கிறது என்பது உறுதி. இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















