திமுக ஆட்சியின் பாதிக்காலம் முடிந்துள்ள நிலையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்-அண்ணாமலை.

‘என் மண் என் மக்கள்,’ பிரசார நடை பயணத்தை மேற்கொண்டுள்ள மாநில தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது:-2024ல் மீண்டும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே நோக்கம். இந்திய அரசியலில் கடந்த 9 ஆண்டுகளாக தான் நல்லது நடந்து வருகிறது. மத்தியில் மோடி வந்த பிறகு தான், ஏழை மக்களுக்காக அரசு வேலை செய்கிறது.

தி.மு.க., ஆட்சியில் ராமநாதபுரத்திற்கு எதுவும் நடக்கவில்லை. வறட்சியாக தான் வைத்துள்ளனர். அரசியலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வாழ்க்கை தரத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

ஒரே குடும்பம் தமிழகத்தை ஆட்டி வைத்து கொண்டுள்ளது. குடும்ப அரசியலில் அடியோடு அரசியலை நாசப்படுத்திவிடும். தமிழகத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து கொண்டுள்ளனர். ஆட்சியின் பாதிக்காலம் முடிந்துள்ள நிலையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்.

ஆனால், மோடி 2023 முடியும் போது 10 லட்சம்பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்றார். இன்று வரை 5.5 லட்சம் பேருக்கு கொடுத்துள்ளது. வரும் டிசம்பருக்குள் 4.5 லட்சம் டிசம்பருக்குள் கொடுக்கப்படும். மோடி, இங்கு ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர் இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version