நான் தலைவர் அல்ல, சேவகன் ! தெறிக்கவிடும் அண்ணாமலை!

தமிழக பா.ஜ.க தலைவராக, இருந்த முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை அறிவித்தது தேசிய பா.ஜ.க இளம் வயதில் ஒரு கட்சியின் பதவியை அளித்தது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை அவர்கள் வரும் 16ம் தேதி தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கிறார்.

இந்த நிலையில் அதற்காக, இன்று ஜூலை 14 இருந்து, கோயம்பத்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் அண்ணாமலை அவருக்கு பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க கும்ப மரியாதை அளித்தார்கள்.சென்னை கிளம்புவதற்கு முன் அண்ணாமலை அவர்கள் அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார், பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து பல பேருக்கு தேசிய அளவில் பொறுப்புகள்வழங்கப்பட்டது. அதேபோல் மறுபுறம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவமுள்ளவர்களும் கட்சியில் பதவிகளை அளித்து வருகிறது பாஜக.

எங்களை பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியம் கிடையாது. இது ஒரு கூட்டு முயற்சி. இது தனிமனித கட்சி கிடையாது. நான் தமிழக பா.ஜ.க கட்சியின் தலைவர் அல்ல, சேவகன். மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு வீடாகவும் கொண்டு செல்வோம். கிராமங்களை நோக்கி எங்களின் திட்டங்களை எடுத்து செல்வோம்.

கோவை மண், நாட்டுக்காக பல உயிர்களை தியாகம் செய்துள்ளது. இந்த மண் மிகவும் புனிதமான மண், இந்த இடத்தில் இருந்து என் பயணம் தொடர்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க வரும். 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகபட்ச தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும். என அண்ணாமலை கூறினார்.

Exit mobile version