தரையில் தவழாமல் நிமிர்ந்து ஆட்சி செய்யகூடிய லேகியம் தான் விற்கிறேன்…. அண்ணாமலை அட்டாக்…. வைரல் வீடியோ..

Annamalai vs edappadi palanisamy

Annamalai vs edappadi palanisamy

தமிழக பாஜக தலைவர் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் இந்த யாத்திரை தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அண்ணாமலையை நோக்கி நகர்கிறார்கள். இதனால் திராவிட கட்சிகள் கலக்கமடைந்துள்ளது. ஆவடி சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை நேரடியாக அட்டாக் செய்ய ஆரம்பித்தார்.

மேலும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பது போல பேசுகிறார் என்று திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கூறியதற்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்துள்ளார் அண்ணாமலை.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது :

அண்ணன் நான் லேகியம் தான் விற்று கொண்டிருக்கிறேன் நம்ம லேகியத்தை வாங்கி குடித்தால் குடும்ப ஆட்சி இருக்காது லஞ்ச லாவண்யம் இருக்காது அடாவடித்தனம் இருக்காது நம்முடைய லேகியம் வாங்கி சாப்பிட்டால் ஊழல் செய்வது இருக்காது தரையில் தவழ மாட்டீர்கள் நின்று கொண்டு நேர்மையாக ஆட்சி செய்வீர்கள்

பங்காளிக் கட்சிகளை ஒழிப்பதற்காக லேகியம் விற்றுக் கொண்டிருக்கின்றேன்தமிழக மக்களே 195 தொகுதிகளில் அந்த லேகியத்தை விற்று உள்ளேன. நேரம் வந்துவிட்டது அதைப் பற்றி பேசுவதற்கு இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் அது தவறாகிவிடும் அதற்கான நேரமும் காலமும் வந்துவிட்டது.

தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியின் பாதை சிங்கப் பாதையாக இருக்குமோ தனித்துவமாக இருக்குமா இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிடத்திற்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்று நினைத்தோம் அது பாரதிய ஜனதா கட்சி பூர்த்தி செய்யுமா என்று தமிழக மக்கள் ஏங்கி கொண்டிருந்தார்கள். அவர்களின் ஏக்கத்திற்கும் ஆவலுக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக பதில் சொல்லும்

இன்றைய ஒவ்வொரு கருத்து கணிப்புகளும் அனைவரையும் ஆச்சர்யபடவைத்துளளது. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20% வாக்குகளை வாங்கும். இந்தியா டுடே 16 சதவீதம் என கொடுக்கிறார்கள் பங்காளி கட்சிகள் எல்லாம் மூன்றாவது இடத்தில் உள்ளார்கள்.

நாங்கள் மக்களோடு மக்களாக ஓடிக்கொண்டிருக்கிறோம் மக்களை பார்த்து கொண்டே வருகிறோம் கடந்த ஆறு ஏழு மாதமாக மக்களோடு மக்களாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம் தெரு ஓரத்தில் தான் குடியிருக்கின்றோம்.

கன்னியாகுமரி தொடங்கி எல்லா இடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் 2024 பாரதிய ஜனதா கட்சி 30 சதவீதத்தை தாண்டும் தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்புவோம் என்று தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கின்றேன. தற்போது பாரதிய ஜனதா கட்சி தனித்து நின்று கொண்டிருக்கிறது தனித்தன்மையான விஷயங்கள் வைத்துக் கொண்டிருக்கின்றோம் தமிழகத்தில் தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் குடும்ப அரசியல் இல்லாத அடாவடித்தனமான அரசியல் உருவாக்க வேண்டும் என்பதற்காக துடித்துக் கொண்டிருக்கின்றோம்

இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Exit mobile version