வைரல் வீடியோ: இங்கிலாந்தின் பிரதமராக வரவில்லை இந்துவாக வந்திருக்கிறேன் ஜெய் ஸ்ரீராம்-ரிஷி சுனகின் உரை!

Rishi Sunak

Rishi Sunak

இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இவர் இந்து மத தர்மத்தின் மீது பெரும் நாட்டம் கொண்டவர் இந்த நிலையில் ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்த நிகழ்வில் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் ரிஷி சுனக்

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் பாபு,நான் இங்கு பிரதமராக அல்ல, இந்துவாக வந்துள்ளேன்” என்று சுனக் தனது உரையைத் தொடங்கினார். மேலும் அவர் பேசுகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. என அடிக்கோடிட்டு காட்டினார். 

  இந்து மதம் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது என்றும் நாட்டின்  பிரதமராக எனது வேலைகளை சிறப்பாக செய்வதற்கு தன்னை ஊக்குவிக்கிறது என்றும் ரிஷி சுனக் மேலும் கூறுகையில், “ஆன்மீக நம்பிக்கை எனக்கு மிகவும் தனிப்பட்ட விஷயமாகும். இது என் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது.

பிரதமராக இருப்பதே பெரிய கவுரவம் தான், ஆனால் இந்த பதவியை வகித்து கடமைகளை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும், கடினமான தேர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும், மேலும் எனது நம்பிக்கை எனக்கு நாட்டிற்காக உழைக்க தைரியம், வலிமை மற்றும் போராடும் குணத்தை இந்து மதம் எனக்கு அளிக்கிறது என்றார் ரிஷி சுனக்.

Exit mobile version