பாஜக தொண்டர்கள் நினைத்தால் 5 நிமிடம்தான், திமுகவை தும்சம் செய்துவிடுவார்கள்.. அண்ணாமலை அதிரடி !

Annamalai IPS

Annamalai IPS

பாஜக தொண்டர்களை ஏவி விட்டால் ஐந்து நிமிடத்தில் திமுகவை துவம்சம் செய்து விடுவார்கள் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆவேசம் தெரிவித்துள்ளார், இந்தியாவிலேயே 18 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக கட்சி பாஜகதான் என்றும் அவர் திமுக அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 நாமக்கல்லில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை பேசியிருப்பதாவது:- திமுக அமைச்சர்கள் ஒரு வருடகாலமாக கெட்ட வார்த்தை பேசாமல் இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன், ஆனால் அண்ணன் அமைச்சர் அன்பரசன் அவர்கள் என்னை பொறுக்கி எனக் கூறியிருக்கிறார். நான் பொறுக்கி தான், திமுகவின் ஊழலை பொறுக்க கூடிய பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கக் கூடிய பொறுக்கி, அவர்கள் செய்கின்ற தவறுகளை பொறுக்கி மக்கள் மத்தியில்  வைக்கிறேன்.

அதற்கு பொறுக்கி என ஒரு பட்டம், அதை தயவு செய்து கொடுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் என் தொண்டர்களை மட்டுமே விட்டேன் என்றால் ஐந்து நிமிஷத்தில் திமுகவை துவம்சம் செய்து விடுவார்கள். அன்பரசன் அவர்களுக்கு நான் ஓன்று சொல்லிக்கொள்கிறேன், பாரதிய ஜனதா கட்சியில் 18 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அதனால் சும்மா இந்த 23 வயசு சின்ன பசங்க, சில்வண்டுகளின் வைத்துக்கொண்டு துண்டை போட்டுக்கொண்டு தொண்டர்களை வைத்து இருக்கிறேன் என்றெல்லாம் நீங்கள் செல்லாதீர்கள். பைக்கில் பர்ரு டுர்ரூன்னு போற பசங்களை எல்லாம் தொண்டர்கள் என கூறி தயவுசெய்து கூப்பிட்டு கொண்டு வராதீர்கள், அது வேற மாதிரி ஆகிவிடும். எப்போதும்கூட நாங்கள் வன்முறையை நிச்சயமாக கையில் எடுக்கமாட்டோம், வன்முறை மீது நம்பிக்கை இல்லாத கட்சி பாரதிய ஜனதா கட்சி. இவ்வாறு அவர் கூறினார். 

Exit mobile version