: தமிழக நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டால் பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் பத்திரிகையின் 52ம் ஆண்டுநிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: 30 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் முழுமையாக தமிழில் பேசுகிறேன். தாய்மொழி என்னை விடாது. நானும் என் தாயை விடமாட்டேன். இந்தியை கற்று கொண்டதால் தமிழை நான் மறக்கவில்லை.இன்றும் என்னால் இந்தியை முழுமையாக பேச முடியவில்லை.
தமிழக நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் வரிவிதிப்பை ஜிஎஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர ஒப்புக்கொண்டால் மத்திய அரசு அதனை செய்யும். வரும் காலங்களில், தற்போது பெட்ரோலில் தற்போது கலக்கப்பட்டு வரும் எத்தனால் அளவு 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்படும்.20 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.பணம் தமிழகத்திற்கு வரவேண்டியது என்பது தவறான தகவல் உணமையில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானப்படி தமிழகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய பணம்கொடுக்கப்படும். என கூறினார்.கடந்த 10 ஆண்டுகளில் நிமிர்ந்து நின்று பதில் சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்துள்ளது.
ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில்: பெட்ரோல் டீசல்விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கு முதுகெலும்பு இல்லை. இந்தியை திணிக்க மாட்டோம் என அண்ணாமலை கூறியது பிடிக்கவில்லை, என்றார்.தமிழ் பேச தெரியாத ஒரு தலைமுறையை திராவிட மாடல் உருவாக்கியிருக்கிறது. இலவச பஸ் பயணத்தை ஊக்குவிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்றார்.