தமிழகத்தில் வாக்குவங்கிக்காக RSS இயக்கத்தை தொடலாம் என நினைத்தால் அது நல்ல வகையில் முடியாது – எஸ்.ஜி சூர்யா .

ஒரு பிரச்சனையும் இன்றி தமிழகத்தில் 45 இடங்களில் RSS பேரணி நேற்று நடந்து முடிந்து விட்டது. இப்பேரணிக்கு மீண்டும் மீண்டும் தடை விதித்து, இன்று ஒரு போதும் தடை விதிக்க முடியாதபடி உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வழிவகை செய்த முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஒரு வகையில் நன்றி.

நேரு, இந்திரா காந்தி போன்ற சர்வ வல்லமை பெற்றிருந்தவர்கள் எல்லாம் முயற்சி செய்து செய்ய முடியாத ஒன்றை, ஒற்றை மாநிலத்தில் வெறும் 30% செல்வாக்கு கூட இல்லாத தி.மு.க எனும் கேடுகெட்ட இயக்கம் செய்ய பகல் கனவு காணுமெனில், அது கனவோடு தான் முடியும் என்பது தான் எதார்த்தம்.வாக்குவங்கிக்காக RSS இயக்கத்தை எல்லாம் தொடலாம் என நினைத்தால் அது நல்ல வகையில் முடியாது என்பதை தி.மு.கழகம் அறிந்து வைத்திருக்கிறது என்றே தெரிகிறது. பார்ப்போம்..

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version