கடந்த ஜூலை மாதம் சென்னை உயா் நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழா் ஒருவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘இந்தியாவில் வெளிநாட்டவா்கள் பலா் உரிய ஆவணங்களின்றி பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக குடியிருந்து வருகின்றனா். அதிகாரிகளின் உதவியுடன், அவா்கள் சொத்துகளையும் வாங்கி இந்திய குடிமக்கள் போல சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனா்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற நிலை இல்லை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது. நைஜீரியாவில் இருந்து வந்த பலா் திருப்பூா் உள்ளிட்ட பல நகரங்களில் விசா இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா்.
இங்கேயே திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று, சொத்துகளை வாங்குகின்றனா். சொந்த நாட்டுக்குச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடுகின்றனா். மேலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் இவா்கள் ஈடுபடுகின்றனா்’ என கண்டனம் தெரிவித்தாா்.
மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தாா். இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதில் நீதிபதி தண்டபாணி கூறியுள்ளதாவது:
“சட்டவிரோதமாக நாடு முழுவதும் குடியேறியவர்களை வெளியேற்ற மத்திய அரசு பல விதிமுறைகளை தந்திருந்த போதும், அவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இன்னும் 3 மாதங்களுக்கு மத்திய உள்துறை சட்டம் ஒன்றை இயற்றி, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பில், “சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டை எப்படிப் பெற்றனர்? மாநில அரசு ஏன் இவர்களை வெளியேற்றாமல் காலம் தாழ்த்துகிறது? இந்த சட்டவிரோத குடியேறிகள் பல குற்றங்களை புரிந்தவர்களாக இருந்தும் அவர்களை ஏன் வெளியேற்றவில்லை?”
போன்ற கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பியதோடு, “இனி இவர்களை அவர்களது தண்டனைக் காலம் முடியும் முன்னரே அவர்களை நாடுகடத்தும் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவசியப்பட்டால் இவர்களுக்கென detention camps / holding camps முகாம்களை ஏற்படுத்தவும். இவர்களால் சமூகத்துக்கு கேடு” என்று சாடியிருக்கிறார் நீதிபதி தண்டபானி! இன்னும் பல நிபந்தனைகளையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி. வரவேற்க வேண்டிய தீர்ப்பு. விடியல் அரசு கண்டிப்பாக அடிபணிய வேண்டும்.