உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் ஏப்ரில் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு. இந்த நிலையில் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசாங்க உத்தரவுகளை மீறி நாக்பாடாவின் தெம்கர் தெருவில், கடந்த திங்களன்று நமாஸ் தொழுகை நடத்த 150 பேர் மசூதியில் கூடியிருந்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திங்கள்கிழமை பிற்பகல் சுமார் 100-150 பேர் ஷாஃபி தொழுகை கூடத்தில் கூடியுள்ளார்கள் , எனவும் கூடிய நபர்கள் சி.ஆர்.பி.சி பிரிவு 144 ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாகவும் இதனால் தொழுகை நடத்திய மசூதிகளை தடை செய்தனர். மும்பையில் ஜே.ஜே.மார்க் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்
உதவி போலீஸ் கமிஷனர் அவினாஷ் தர்மதிகாரி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு மஸ்ஜித்தை அடைந்து சபைக் கூட்டத்தை கலைத்தனர். பின்னர், மஜால் பத்வான் குனி உள்ளிட்ட மசூதி அறங்காவலர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள கவனக்குறைவான செயல்) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
தப்லிக் இஸ்லாமியர்களால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றாக கூடி தொழுகை நடத்தியது என்ஹா விதத்தில் நியாயம் என்கின்றார்கள் மக்கள்