சீனாவை தொடர்ந்து இம்ரான்கானுக்கும் கட்டம் சரியில்லை பின்லேடன் தியாகியம்!

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தன் அறிக்கையை ஐ.நா.வில் சமர்ப்பித்து அமெரிக்கா, அதில் கடந்த, 2019 பிப்ரவரியில், காஷ்மீரில் புல்வாமாவில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், லஷ்கர் -இ – தொய்பா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலுக்குப் பின், சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்தது. சில பழமைவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதற்கு எதிராகவும் கடுமை காட்டப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான், இன்னும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு நிதி என ஒரு டாலர் கூட செல்லகூடாது என கடும் கோபத்தில் தயாரான அறிக்கை இது. இதை கேட்ட இம்ரான் “அப்படி எல்லாம் இல்லை, பின்லேடனை கொன்றதை வைத்து அப்படி சொல்லமுடியாது, பின்லேடன் ஒரு தியாகி. அந்த தியாகியினை அமெரிக்கா எங்களை மீறி கொன்றது அவமானம்” என பேச, பெரும் அதிருப்தி இம்ரான்கான் மீது பாகிஸ்தானில் வந்துள்ளது. அல்கய்தாவால் கொல்லபட்ட பெனசீர் கோஷ்டி இன்னும் பல முஸ்லீம் லீக் தலைவர்களெல்லாம் பின்லேடனே பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை கொண்டுவந்தவர் என சீறுகின்றன‌ பாகிஸ்தான் ராணுவம் எப்பொழுதுமே அமெரிக்காவின் ரகசிய ஏஜெண்ட், எப்பொழுதுதெல்லாம் ஆட்சியாளர்கள் அமெரிக்காவினை மீறுவார்களோ அப்பொழுதெல்லாம் அங்கு ராணுவம் ஆட்சியினை பிடிக்கும் அப்படித்தான் பூட்டோ முதல் பலர் தூக்கபட்டனர், சிலர் விரட்டபட்டனர்
போகிற போக்கினை பார்த்தால் இம்ரான்கானும் அதே நிலைக்கு தள்ளப்படுவார்.ஆம், ராணுவ புரட்சி வந்தால் இம்ரான் லண்டனுக்கு தப்புவார், அங்கு செல்ல போகும் தமிழக சர்வாதிகரி அவரை சந்திக்கலாம்.

Exit mobile version