இந்தியாவில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முக்கிய மைல்கல்லான 50 லட்சத்தை (50,16,520) கடந்துள்ளது.
அதிக அளவிலான நோயாளிகள் தினமும் குணமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74,893 நபர்கள் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
சமீபத்தில் தினமும் 90,000-க்கும் அதிகமானோர் நாட்டில் குணமடைந்து வந்தனர். கடந்த 11 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகம் ஆகும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குணமடைபவர்களின் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேசிய குணமடைதல் விகிதம் 82.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விட அதிக குணமடைதல்களை 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கண்டு வருகின்றன.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, கேரளா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்கள் நாட்டின் மொத்த குணமடைதல்களில் 73 சதவீதத்துக்கு காரணாமாக உள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















