Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கோவில்களை மையப்படுத்தி களத்தில் இறங்கினார் அண்ணமலை! ஒருங்கிணைப்பாளராக ஹெச்.ராஜா அறிவிப்பு!

Oredesam by Oredesam
October 1, 2021
in செய்திகள், தமிழகம்
0
புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

கேளாத காதில் ஊதிய சங்கின் நாதம், தொடரும் திமு.க அரசின் பிடிவாதம்
ஆலயம் முன்னர் அறப்போரட்டம்தமிழர்கள் வாழ்வோடு கலந்த இறை நம்பிக்கையின் அவசியத்தை வள்ளுவர் சொல்லும்போது, கடவுள் மறுப்பாளர்களை கண்டிக்கிறார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
என்று வள்ளுவப் பெருந்தகை இறைவனுடைய திருவடிகளை வணங்க மறுப்பவர்கள், கற்ற
கல்வியினால் என்ன பயன் என்று தனது இரண்டாவது குரளிலேயே எடுத்துரைக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு புனித நாளாகக் கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாளான சனி ஞாயிறு ஆகிய நாட்களில் திருக்கோயில்களை மூடுகிறது அதை மாற்றி வாரத்தின் எல்லா நாட்களிலும் திருக்கோவில்களை திறக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப்போனது கோவில்களுக்குச் சென்று கடவுளை வழிபடுவது தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி ஆகும், தடுக்க நினைப்பதுதீய எண்ணத்தின் சதியாக இருக்குமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69% ஏறத்தாழ 89 கோடி பேர் ஒருமுறையாவது தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள், மத்திய அரசின் பெருமுயற்சியால்,இலவச தடுப்பூசியால் நம் நாடு தற்போது பாதுகாப்பாக இருக்கிறது. பள்ளிகள் கல்லூரிகள் அலுவலகங்கள் உணவகங்கள் போக்குவரத்து என்று எல்லாம் சரளமாக நடைபெறும்போது, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் வாரநாட்களில் மூடுவது
வஞ்சக எண்ணம் ஆகத்தான் இருக்குமே தவிர அதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை மூன்று நாட்கள் தடுத்து நான்காவது நாள் திங்ககிழமை அதிக கூட்டத்தை வேகமாக அனுமதிப்பதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கின்றோம், என்று திமுக அரசு கூறுவதை யாரும் ஏற்க முடியாது. இதில் கொஞ்சமும்உண்மையில்லை. திமுகவுக்காக கட்டுக்கதைகளை வடிவமைக்கும் நபர்களைக் கலந்து ஆலோசித்து புதிதாக வேறு ஒரு நல்ல பொய்யை, அவர்கள் கேட்டுப் பெறலாம்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய திமுக, பிறகு தன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி வாரத்தின் அனைத்து நாட்களிலும் டாஸ்மாக்கை திறப்பதற்கு காட்டும் அவசரத்தை, கண்டாலே நமக்கெல்லாம் விளங்கிவிடும், திமுக ஆட்சி தற்போது, எந்த முதலைகளின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பது காவல்துறையினர் கடமையாற்ற பல்வேறு கண்ணியமான பணிகள் எதிர்நோக்கி இருக்கும்போது ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் கால்கடுக்க அவர்கள் காவல் நிற்பதைப்
பார்க்கும்போது நாங்கள் வெட்கப்படுகிறோம்.

கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட விலைமதிப்புள்ள பழமையும் பாரம்பரியமும் மிக்க புனிதமான ஆபரணங்களை உருக்கி அதை தங்க கட்டியாகி அதிலும் பணம் சம்பாதிக்க நினைக்கிறது திமுக அரசு. தமிழக அரசின் திருக்கோவில் பராமரிப்பு அறநிலையமாக நடக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தின் வணிக நிறுவனமாகநடக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம், புரிகிறது, கடவுள் இல்லை என்ற கடவுள் மறுப்பு தத்துவத்தின் அடிப்படையிலே இயங்குகிற திமுக அரசு, கடவுளை வழிபடுபவர்களுக்கு தன்னாலான எல்லாவிதமானஇடைஞ்சல்களையும் தொல்லைகளையும்தரத் தயங்காது, ஆனால் எத்தனை தொல்லைகள்தந்தாலும் கூட “அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் அருளைப் பெற்றவர்கள் தமிழர்கள்.

தமிழர்களை கோவிலுக்குச் செல்லாமல் தடுக்க முடியாது கோவிட் தொற்று நோயை, கோவில் திறக்காததற்கு காரணமாக சொல்வதுநகைப்பிற்குரிய செயல், மாற்று மதங்களின் இறை வழிபாட்டு தளங்கள் எந்த இடையூறும் இல்லாமல் எல்லா நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்கிக் கொண்டுதான்
இருக்கிறது என்பதை நிரூபிக்க பல சான்றுகள் உள்ளன.

ஆகவே திமுக அரசு தன் “ஒரு சார்பு அரசியல் நிலைப்பாட்டை’யே, தன் அரசின் நிலைப்பாடாகவும் தொடர்வது தெளிவாகிறது. திருக்கோயிலை நம்பியிருக்கும் சிறு குறு வியாபாரிகள் தேங்காய் பூ பழம் விற்பவர்கள்
வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. செவிடன் காதில் ஊதிய சங்காக, கேளா மடந்தையாக, ஒரு சாராருக்கு உடந்தையாக, இருக்கும் அரசினால், இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 11 மணி அளவில் முக்கிய கோவில்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்.

தமிழ் சமுதாயமே உங்கள் அனைவரையும் உணர்வுபூர்வமாக அழைக்கிறேன் நடுநிலை தவறி, மக்களின் நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல், ஒருதலைப்பட்சமாக செயல்படும், மக்கள் உணர்வை மதிக்காத இந்த அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்படுங்கள்,

அனைத்து நாட்களிலும் திருக்கோயில்கள் திறக்கவேண்டும் அதுவும் நவராத்திரி பண்டிகை நெருங்குவதால் உடனே திறக்க வேண்டும் என் தமிழ் சகோதர சகோதரிகளே இந்தப் போராட்டத்திற்கு பிறகும் அரசு நம் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் இதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற பாரதிய ஜனதா கட்சி தயங்காது, அரசின் அடக்குமுறையைக் கண்டு அச்சம் எமக்கு இல்லை. திமுக அரசுமக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவோம்.

இந்தப்போராட்டத்தை நமது முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.
அனைவரும் உங்கள் நல்லாதரவை நல்கி வரும் ஏழாம் தேதி நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொண்டு அரசை திகைக்க வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

என தனது அறிக்கையில் திரு.அண்ணமாலை அவர்கள் கூறியுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

நாங்க நல்லா இருப்பதற்கு மோடி தான் காரணம்! கண்கலங்க வைத்த முஸ்லீம் பெண்ணின் பேச்சு..

நாங்க நல்லா இருப்பதற்கு மோடி தான் காரணம்! கண்கலங்க வைத்த முஸ்லீம் பெண்ணின் பேச்சு..

December 31, 2021
விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

August 11, 2021
டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம்! 75,000 கோடி இந்தியாவில் முதலீடு  கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை

டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம்! 75,000 கோடி இந்தியாவில் முதலீடு கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை

July 14, 2020
தனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

தனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

August 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x