இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளுக்கான ஆதாரமாக இருப்பது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பாகும்.  இது 2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை கணக்கெடுப்பு காலமாக உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போன்ற மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் ஆகியவையும்  பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத்  திட்டம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் , தீன் தயாள் உபாத்யாயா ஊரகத் திறன் பயிற்சித் திட்டம் , கிராமப்புற சுயவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்கள் , தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் , பிரதமரின் முத்ரா திட்டம் போன்றவையும்  வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கின்றன.  மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களின் விவரங்களை https://dge.gov.in/dge/schemes_programmes என்ற இணைய தளத்தில் காணலாம்.

மேலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் இதர வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் ரூ.2 லட்சம் கோடி மத்திய ஒதுக்கீட்டில் பிரதமரின் 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அரசு அறிவித்தது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர்  ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Exit mobile version