உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்துறை அமைச்சகம் (MHA) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள், மாநிலங்கள், ஆளுநர்கள் என அனைவரும் இந்த கொண்டாட்டங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மக்களை ஒன்றிணைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இணைச் செயலாளர் அனுஜ் ஷர்மா அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்டு 15 சுதந்திர விழா (Independence Day) நிகழ்வுகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், சுதந்திர தின விழா நல்ல முறையில் கொண்டாடப்படும். இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்யும் போது, தனி மனித இடைவெளியை பராமரித்தல், முகக்கவசங்களை அணிவது, சரியான சுத்திகரிப்பு, பெரிய கூட்டத்தைத் தவிர்ப்பது போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் வழங்கப்பட்ட கோவிட் -19 தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் ”என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“செங்கோட்டையில் (Ref Fort) நடைபெறும் விழாவில் பிரதமருக்கான கார்ட் ஆஃப் ஹானர், 21 கன் சல்யூட், பிரதமரின் உரை மற்றும் தேசிய கீதம் பாடுவது ஆகிய நிகழ்வுகள் இருக்கும்” என்று உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















