Tag: NEWS TVNEWS

”காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க, அப்புறம் என்ன லைட்ட போடு, தண்ணிய கொடுன்னு கேட்குற?” – திமுக நிர்வாகி.

”காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க, அப்புறம் என்ன லைட்ட போடு, தண்ணிய கொடுன்னு கேட்குற?” – திமுக நிர்வாகி.

விருதுநகரில் இளைஞர் ஒருவரை திமுக ஒன்றிய துணைத்தலைவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை அடுத்த கரிசல்குளத்தை சேர்ந்த ...

குறுகிய காலத்தில் 14 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும்  திட்டத்தின் கீழ், இதுவரை 14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. உலகளவில் மிக விரைவாக, வெறும் 99 நாட்களிலேயே இந்தியா இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி வரை, 20,19,263 முகாம்களில்‌ 14,09,16,417 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 99-வது நாளான நேற்று (ஏப்ரல் 24, 2021), நாடு முழுவதும் 25,36,612 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,85,110 ஆக (83.05%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,113 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 74.53 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,160 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 37,944 பேரும், கர்நாடகாவில் 29,438 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 26,82,751 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 15.82 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.13 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

சென்னையில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்.

சென்னையில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்.

ஆப்பிரிக்காவில் இருந்து தபால் பார்சல் மூலமாக போதைப் பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக சென்னை சுங்கத்துறைக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு, கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து வந்த 5 பார்சல்கள் கைப்பற்றப்பட்டு சோதனையிடப்பட்டன. பூந்தொட்டிகள் என தெரிவிக்கப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, 11 மர குவளைகள் வெள்ளை நிற பேப்பரில் சுற்றப்பட்டிருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது, இளஞ்சிவப்பு நிற பாலீத்தின் கவரில் காட் போதை இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குவளைகளிலிருந்து மொத்தம் 46.8 கிலோ காட் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1.17 கோடி. இந்த கடத்தல் தொடர்பாக சென்னையில் உள்ள ஒரு  ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும், 27 வயது ஏரோனாட்டிக்கல் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். ‘கேதேயுடுலிஸ்’ எனப்படும் இந்த காட் இலைகள் ‘மிரா’ எனவும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஏமனில் விளைவிக்கப்படும் ஒருவித போதைத் தரும் இலை வகையாகும். கடந்தாண்டு மார்ச் மாதம்,  ரூ.40 லட்சம் மதிப்புள்ள 15.6 கிலோ காட் இலைகளை, சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சுங்கத்துறை  பறிமுதல் செய்தது. அவை எத்தியோப்பியாவில் இருந்து வந்தது.  இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

நாட்டில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13.54 கோடியைக் கடந்தது.

நாட்டில் போடப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று  13.54 கோடியைக் கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை மொத்தம்  13,54,78,420 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 31 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன.  ...

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் கன்டெய்னர்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு (AFMS) முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொவிட் 2வது அலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான 23, ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கருவியும், நிமிடத்துக்கு 40 லிட்டர், ஒரு மணிக்கு 2,400 லிட்டர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இவற்றின் மூலம் 20 முதல் 25 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை எளிதாக பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த ஆக்ஸிஜன் கருவிகள் ஒரு வாரத்துக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அதிகரித்துள்ள மருத்துவ தேவையை சமாளிக்க, ராணுவ மருத்துவமனைகளில் குறைந்த கால பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, 2021 டிசம்பர் 31ம் தேதி வரை பணிக்கால நீட்டிப்பை வழங்க பாதுகாப்புத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.  இதன் மூலம் 238 மருத்துவர்களுடன் ராணுவ மருத்துவ சேவைகளின் பலம் அதிகரிக்கும்.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும்  பிரதமர் மோடி.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் உள்ள முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.  இது சவால்களை சந்திக்கும் நேரம் மட்டும் அல்ல குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க வேண்டிய காலம் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அரசு மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை பராமரிக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களாக உற்பத்தியை அதிகரித்ததற்காக ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பிரதமர் பாராட்டினார். திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அவர்  ஆமோதித்தார். நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள, தொழிற்சாலை ஆக்ஸிஜனை மாற்றிவிட்டதற்காக ஆக்ஸிஜன் தொழில்துறையினருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலைமையை மேம்படுத்த, வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர்  பேசினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் அதேபோல் ஆக்ஸிஜன் போக்குவரத்துக்கான வசதியையும் மேம்படுத்த வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.  ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு, இதர  கேஸ் டேங்கர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்  ஆக்ஸிஜன் தொழில்துறையினரை வலியுறுத்தினார். மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு, காலி ஆக்ஸிஜன் டேங்கர்களை உற்பத்தி மையங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவது பற்றி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறினார். மத்திய அரசு, மாநிலங்கள், ஆக்ஸிஜன் தொழில் துறையினர், போக்குவரத்து உரிமையாளர்கள், மருத்துவமனைகள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என  பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சிறந்த கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தான், இந்த சவாலை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விரைவில் இந்த நெருக்கடியை நாடு வெற்றிகரமாக முறியடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைமை நிர்வாக இயக்குனர் திரு முகேஷ் அம்பானி, செயில் தலைவர் திருமதி சோமா மண்டல்,  ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் திரு சாஜன் ஜிந்தால், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் திரு நரேந்திரன், ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் திரு நவீன் ஜிந்தால், ஏஎம்என்எஸ் நிறுவனத்தின் திரு திலீப் ஓமன், லிண்டே நிறுவனத்தின் திரு எம் பானர்ஜி, ஐனாக்ஸ் நிறுவனத்தின் திரு சித்தார்த் ஜெயின், ஜாம்ஷெட்பூர் ஏர் வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு நொரியோ சிபுயா  நேஷனல் ஆக்ஸிஜன் லிமிடெட் நிறுவனத்தின் திரு ராஜேஷ் குமார் சரப்,  அகில இந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் திரு சாகெட் திகு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ரூ.25 கோடியை மோசடி! சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர் உட்பட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது!

சி.எஸ்.ஐ ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு ...

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறதா! 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்.

ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்."ஸ்டெர்லைட் நிறுவனம்" இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், கொரோனா ...

தமிழகத்தில் யாருக்காக வேலை செய்தால் பிரசாந்த் கிஷோர்

தமிழகத்தில் யாருக்காக வேலை செய்தார் பிரசாந்த் கிஷோர் என்ற கேள்வி திமுக பிரமுகர்கள் இடையே மீண்டும் எழுந்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக விற்காக அரசியல் வல்லுநர் ...

சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

தமிழகத்தில் 234 தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அனைத்து தொகுதிகளுக்கும் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி வாக்கு என்னப்படுகின்றது ...

Page 17 of 28 1 16 17 18 28

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x